பக்கம்:நெற்றிக்கண்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நெற்றிக் கண்

அதிகாலையில் இதைச் சொல்லிவிட்டுப் போவதற்காக அவனைத் தேடி அறைக்கு வந்திருந்தாள். அப்போதிருந்த, மனநிலையில் அவனால் அவளை மலர்ச்சியோடு வரவேற்று பேச முடியவில்லை. அவளாலும் அவன் முன் மலர்ச்சி யோடு நின்று பேச முடியவில்லை. சொல்ல வந்ததைப் 'பேசுவதற்குச் சொற்களைத் தேடி நிற்பவள்போல் அவள் தயங்கினாள். தேடிய சொற்கள் வராமல் அழுகைதான் பொங்கிக் கொண்டு வந்தது அவளுக்கு. அவளுடைய, அழுகை செவியில் ஒலிப்பதற்குமுன் கீழே தலையைக் குனிந்தவாறு மெளனமாயிருந்த சுகுணன், அந்தநிகழ்ச்சிக்கு மனம் இரங்கி மெல்லத் தலை நிமிர்ந்து,

'விடிந்ததும் விடியாததுமாக இங்கே வந்து இப்படி அழுவதற்கு என்ன வந்துவிட்டது இப்போது' என்று. மெல்ல வினவினான்.

"அவருக்கு டெல்லியில் உத்தியோகம் ஆகியிருக். கிறது.' -

'அவருக்கு என்றால் எவருக்கு?' இந்த அவருக்கு அவனுள் எரிச்சலூட்டியிருக்க வேண்டும்போல் ஒலித்தது அவன் கேள்வி. அந்தக் கேள்வி யின்தொனி புரியாமல் அதற்கு எந்த விதத்தில் மறுமொழி' கூறுவதென்று தயங்கினாள் துளசி. பின்பு "அவருக்கு உத்தியோகமாகிவிட்ட தென்று வாக்கியத்தின் மகிழ்ச்சி யில் விருப்பாகவோ, வெறுப்பாகவோ தன்னைச் சம்பந்தப் படுத்திக் கொள்ள விரும்பாதவளைப் போல, அது தான்...அப்பாவின் மாப்பிள்ளைக்கு டெல்லியில் உத்தி யோகம் ஆகிவிட்டது...' என்று தயங்கித் தயங்கிச் சொன்னாள். அவள் அப்படிக் கூறிய உடனே சுகுணனும் தன் கடுமையை விடாமல் 'அப்பாவின் மாப்பிள்ளைக்கு என்றால்: ஓ.புரிகிறது! புரிகிறது! அதாவது உன் கணவருக்கு டெல்லியில் உத்தியோகமாகிவிட்டதென்று என்னிடம் சொல்லிவிட்டுப் போக வந்திருக்கிறாய்! இல்ன்லயா?' என்று குத்தலாக வினவினான். ஒன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/154&oldid=590529" இலிருந்து மீள்விக்கப்பட்டது