பக்கம்:நெற்றிக்கண்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 187

நினைவுகளையோ மறக்க முடியலே. அப்பாவிடம் பேசற போதும் உங்களைப் பற்றிப் பொதுவாக விசாரித்தேன். நான் விசாரித்தபோது அவர் உங்களைப் பற்றி அவ்வள்வு சுமுகமாகப் பதில் சொல்லலை. நாளுக்கு நாள் எங்களுக் குள்ளே மனஸ்தாபம் அதிகமாகிக் கொண்டு வருகிறது அம்மா! சுகுணன் இனிமேல் அதிக நாள் இங்கே இருப்பா ரென்று சொல்லமுடியாது’ என்று வேறு சொல்லி என் கலக்கத்தை அதிகமாக்கி விட்டார். அப்பாவிடம் பேசி முடித்துப் ஃபோனைக் கீழே வைத்த வினாடியிலிருந்து எனக்கு ஒரே கவலையாக இருந்தது. ஒரு வேலையும் ஒட வில்லை. இரவு ஒன்பது மணிக்குமேல் நீங்கள் எப்படியும் அறைக்கு வந்து விடுவீர்கள் என்று எண்ணிக் கூப்பிட்டேன். முதலில் இல்லை என்றார்கள். பொறுமையோடு டெலி போனடியில் காத்திருந்தேன். இப்போது தான் கிடைத் தீர்கள். அதுசரி இரவு இவ்வளவு நேரம் வரை எங்கே போயிருந்தீர்கள்?" . . 'காரியமிருந்தது, வெளியே போயிருந்தேன்...” "அப்பாவுக்கும், உங்களுக்கும் ஆபீஸில் அப்படி என்ன மனஸ்தாபம்?" • . .

"ஒரு முதலாளிக்கும்-தொழிலாளிக்கும் இடையில் எத்தனையோ மனஸ்தாபங்கள் இருக்கும்...' -

"நீங்கள் தொழிலாளியா...என்ன? "எல்லாரையும் உன்னுடைய அப்பா அப்படித்தான் நடத்துகிறார். அவர் சம்பளம் கொடுக்கிறார். அதனால் நாங்கள் வேலை செய்கிறோம்! சுதந்திரமாக அங்கே தாங்கள் வேலை செய்து விடக்கூடாது!’ - -

சுகுணன் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தபோது டெலிபோன் இல்ாகா பெண்மணி குறுக்கிட்டு முதல் மூன்று நிமிடங்கள் முடிந்து விட்டதாக அறிவித்தாள். அந்த அறிவிப்புக் குரலை அடுத்து அவசரமாகவும் பரபரப்பாகவும் தயவு செய்து இன்னும் மூன்று நிமிஷம் எக்ஸ்டெண்ட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/189&oldid=590566" இலிருந்து மீள்விக்கப்பட்டது