பக்கம்:நெற்றிக்கண்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நெற்றிக் கண்

டெலிபோனடியிலேயே உட்கார்ந்திருந்தான் சுகுணன். மறுபடி அவன் எழுந்து அறைக்குள் சென்றபோது மணி பன்னிரண்டரைக்கு மேல் ஆகியிருந்தது. அப்போதிருந்த மன நிலையில் உறக்கமும் அவனை அணுகவில்லை. உடம்பு சோர்ந்தால் வருகிற தூக்கம் மனம் விழித்திருந்தால் வரமாட்டேனென்கிறதே! நாகசாமிக்கு அலுவலக முறைப் படி சுருக்கமாக ஓர் இராஜிநாமாக் கடிதமும் தனிப்பட்ட முறையில் விரிவானதொரு கடிதமும் எழுதினான் அவன். தன்னுடைய தொடர் கதையின் கடைசிப் பகுதியையும். தன்னிடம் அரைகுறையாயிருந்த அலுவலகத்து வேலை களையும்-இரண்டொரு தினங்களில் முடித்து அனுப்பி விடுவதாகவும் அந்தக் கடிதத்தில் அவருக்கு எழுதியிருந்தான் அவன். காரியாலய ஊழியர்களும் ஃபோர்மேன் நாயுடு சிலரும் தன்னுடைய வெளியேற்றத்தைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று கற்பனை செய்வதில் சிறிது நேரம்: கழிந்தது. இப்படி அவன் தானாகவே இராஜினாமா செய்யத் துண்டுவதற்கான காரியங்களை எல்லாம் செய் திருந்த நாகசாமியும் ரங்கபாஷ்யமும் இதை வரவேற்று. மகிழ்வார்கள் என்றே அவனால் நினைக்க முடிந்தது. அதற்குப் பின் அன்றிரவு துளசி மறுபடி டில்லியிலிருந்து கூப்பிடவேயில்லை. ஒன்று டெல்வி லயனில் அதிக "கால்' களின் பிரஷர் இருந்து அது அவளுக்குக் கிடைக்காமல் போயிருக்க வேண்டும். அல்லது அவளே மறுபடி கூப்பிடு கிற எண்ணத்தைக் கைவிட்டிருக்க வேண்டும். சுகுணனும் நீண்ட நேரம் விழித்திருந்த பின் அதிகாலையில் சோர்ந்து உறங் கிப்போனான். எழுந்திருக்கும்போது விடிந்து அதிக நேரமாகியிருந்தது. குளித்து விட்டுச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு நேரே தபாலாபீசுக்குப் போய் நாக சாமிக்கு எழுதியிருந்த கடிதங்கள் இரண்டையும் முதல் வேலையாகப் பதிவுத் தபாலில் அனுப்பின்ான். இரண்டு மூன்று நாட்களில் அங்கு புறப்பட்டு வருவதாகச் சகோதரிக்கு ஒரு முன் கடிதம் எழுதினான். மறுபடியும் அ ைறக்கு வந்ததும் தன் கடமையை விரைந்து முடித்தாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/192&oldid=590569" இலிருந்து மீள்விக்கப்பட்டது