பக்கம்:நெற்றிக்கண்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 நெற்றிக் கண்

மலைத்துப் போகிறது. சுகுணனும் அப்போது அப்படி மலைத்த நிலையில்தான் இருந்தான். அந்த ஏமாற்றம் அவனையும் தவிக்க வைத்தது என்பது உண்மைதான். ஆனால் அந்தத் தவிப்பை ஆண்மையின் பெருமிதத்தோடு அடக்கியாண்டு பேச முடிந்தது அவனால். அவளால் அது

முடியவில்லை. - $ 2.

மெல்லிய பலவீனமான சிறகுகளையுடைய பறவைகள் அதிக உயரம் பறக்கமுடிவதில்லை. ஆனால், அவை அதிக உயரம் பறக்கிற பறவைகளை எல்லாம்விட அழகாகவும், மென்மையாகவும், இங்கிதமாகவும் தோன்றுகின்றன. குயிலைப்போல், கிளியைப்போல், சிட்டுக்குருவியைப்போல் மைனாவைப்போல், பெண்ணின் அன்பிற்கும் மெல்லிய சிறகுகள்தான் உண்டு போலிருக்கிறது.

அன்று மாலை இரயில் புறப்படும்போது அத்தனை மன வேதனைகளுக்குமிடையில் கூடப் பிரயாணக் குறுகுறுப்பு அவன் மனத்தில் இருந்தது. இரயில் புறப்படுமுன் கடைசி நிமிஷத்தில் எப்படியோ மின்னல்போல் துளசியும் ஒரு விநாடி வந்து கண்கலங்கி நின்றாள்.

'விடாமல் துரத்தும் இந்த மெல்லிய காதல் பறவையின் சிறகுகள் வலிக்குமே" என்று அவனுள்ளம் இரத்தம் கசிந்து மனம் புண்ணாயிற்று. அவளை ஆளவும் அவனுக்கு உரிமையில்லை. கண்டிக்கவும் உரிமையில்லை! தான் டில்லி திரும்புவதற்குள் அவசியம் அவன் வந்துவிட வேண்டும் என்று மன்றாடிக்கொண்டே, 'நானே செய்தது. ரயிலில் சாப்பிட வசதியாயிருக்கும்'-என்று ஒரு டிபன் பொட்ட லத்தையும் எடுத்து நீட்டினாள் துளசி, அவை மறுக்கும் துணிவின்றி அவன் வாங்கிக் கொண்டான். : -

மனிதர்கள் நாடும் சுகங்கள் இப்படி அல்பமானவை. தான். ஆனால் இந்த அல்பமான சுகங்களைத்தானே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் காவியகுணங்களாகக் கொண்டாடியிருக்கிறார்கள்?’ -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/212&oldid=590589" இலிருந்து மீள்விக்கப்பட்டது