பக்கம்:நெற்றிக்கண்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 நெற்றிக் கண்

அவள் பேருக்கே அனுப்பினால் இது அவளிடமே நேரில் கிடைக்குமென்று சுகுணனுக்குத் தெரியும்.

அவள் வீட்டில் அவளுக்குச் செல்லமும் உரிமையும் அதிகம். அவள் பெயருக்கு வருகிற கடிதத்தை அவளைத் தவிர வேறு யாருமே பிரிக்கமாட்டார்கள். அவள் வீட்டில் இல்லாமல் வெளியே எங்காவது புதுமணமான ஜோடி யாய்க் கணவனோடு சினிமா, கடற்கரை என்று போயிருந் தாலும் அவள் வந்தபின் அவளே கடிதத்தைப் பார்ப்பாள் என்று உறுதி செய்துகொண்டு, 'வீரர்களின் கம்பீரமான தோள்களை அலங்கரிக்க வேண்டிய மனமாலைகள் சந்தர்ப்பவசத்தால் கோழைகளின் தளர்ந்த கைகளில் சூட்டப்பட்டு விடுவதும் உண்டு போலும் என்று முத்து முத்தாக எழுதிக் கீழே சுகுணன் என்று கையெழுத்தும் இட்டு மேலே மண் வாழ்த்து' என்று தலைப்பும் போட்டுஉள்ளே வைத்து உறையை மூடி அஞ்சல் தலையும் ஒட்டி ஆத்திரந்தோய தபாலுக்கு அனுப்பியபோது-எப்போதோ இலக்கிய விவகாரங்களில் தகுதியற்ற எதையாவது பத்திரிகையில் கடுமையான சொற்களில் குத்தலாகச் சாடி எழுதி முடிக்கிற வேளையில் உண்டாகுமே ஒரு கோபமான மனநிறைவு-அந்த மாதிரி மன நிறைவுதான் இன்றும் இந்த விநாடியில் அவனுக்கு உண்டாகியிருந்தது.

- தன்னுடைய சொற்கள் தான் நியமித்து அனுப்பிய கடுமையோடு போய் இன்னொருவரைத் தாக்கித் துன்புறுத்தும் என்று நினைக்கிறபோதுதான் மனத்துக்கு எத்தனை சுகமாயிருக்கிறது? சாயங்காலம் அந்தக் கிராமத் திலிருந்து தன் கடிதம் எந்த இரயிலில் பயணம் செய்யுமோ அதே இரயிலில் சென்னைக்கு பிரயாணமாகிற போதும் இந்தத் தார்மீகக் கோபத்தோடு கூடிய மனத்திருப்தியே அவனிடமிருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/24&oldid=590390" இலிருந்து மீள்விக்கப்பட்டது