பக்கம்:நெற்றிக்கண்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺50 நெற்றிக் கண்

ஐசுவரியத்தைப் பொங்கச் செய்வது நானல்லாமல் வேறு. யார்? நானா? இல்லையா? இல்லையென்று வாயால் துணிந்து நீங்கள் சொல்லிவிடலாம். நான் இன்னொரு. வருக்குக் கழுத்தை நீட்ட நேர்ந்து விட்ட துர்பாக்கியம் உங்களை அப்படிச் சொல்ல வைக்கும். ஆனால் உங்கள் மனச்சாட்சியை நீங்களே பொசுக்கிவிட முடியாது. உங்க. ளுக்கு மனம் இருந்தால் அதற்கு நான்தான் சாட்சி, இன்றும் நாளையும்-ஏன் இந்த மண்டை வேகிற வரையும்: அப்படித்தான். என்னுடைய வெறும் மாமிச உடம்புைத். தான் இன்னொருவருக்கு வாழக் கொடுத்திருக்கிறேன். அது நான் செய்த பாவம், மனம்-மனம் என்று வானளாவ: எழுத்தில் எழுதியிருக்கிறீர்களே; அந்த அற்புத வஸ்துவை' உங்களிடமல்லவா வைத்து விட்டுப்போனேன்.நம்பி ஒப்படைத்துவிட்டுப் போன பொருளை இல்லையென்று. ஏமாற்றுவதுதான் நியாயமா?’’ -"

-துளசியின் பேச்சு இதுவரை இவ்வளவு கூராக அவன் நெஞ்சில் வந்து தாக்கியதே இல்லை. சோகத்தை கற்பித்துப் பேசுகிறவனின் சொற்கள் வேறு, சோகத்தை. அனுபவிக்கிறவர்களின் சொற்கள் வேறு. சோகத்தை. இதயத்திலிருந்து கொட்டுகிறவர்களுக்கு அந்தச் சோகமே. சொற்களாக வருகின்றன. அது தன்னைப்போல் கற்பித்து எழுதியவர்களின் கற்பனைச் சோகத்தைப் பொய்யாக்கி விடுகிறது என்று அப்போது தோன்றியது சுகுணனுக்கு. துளசி அவ்வளவு உணர்ச்சி நிறைந்த வார்த்தைகளைத் தன் சோகமாகக் கொட்டி விட்டாள் அவன் முன், சிறிது: நேரம் அவளுக்கு எதை மறுமொழி கூறுவது, எப்படிக் கூறுவது, எந்தச் சொற்களால் கூறுவது என்றே தெரியாமல் அவன் தயங்கினான். அந்த அறையில் அப்போது அவர்கள் இருவரைத் தவிர வேறெவரும் இல்லை. துளசி அழுது கொண்டே சுகுணனிடம் ஏதோ வினாவியதையும் கண்டு, இவர்கள் சொந்தப் பேச்சுக்கிடையே இனி இங்கும் நாம் நிற்கக்கூடாது என்பதுபோல் கமலமும் கூட வெளியேறி மூன்வராந்தாப் பக்கம் போயிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/252&oldid=590629" இலிருந்து மீள்விக்கப்பட்டது