பக்கம்:நெற்றிக்கண்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நெற்றிக் கண்

தன் கைப்பையைத் திறந்து பளிரென்று மின்னும் புத்தம் புதிய நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணிக் கொண்டிருந் தாள். அவளையும் அந்தப் பணத்தையும் இலட்சியம் செய்யாதவன் போல வேறு ஏதோ காரியங்களில் மூழ்கி னான் அவன். அவனுடைய அந்த அலட்சியத்துக்காகக்கூட அவன் மேல் ஆத்திரப்பட முடியாத அவ்வளவு பிரியத்தை வைத்து விட்ட துளசியோ நிதானமாகப் பணத்தை எண்ணி ஓர் உறையில் போட்டு அதன் மேல் முத்து முத்தான எழுத்துக்களில் டைம்ஸ் அக்கு ஒர் அபலையின் நன்கொடை" -என்று எழுதி அவனிடம் அதை நீட்டினாள். அவன் அதை வாங்கிக் கொள்ள மறுத்தான். -

ஏன்? டைம்ஸ் நின்றுபோய்விடக் கூடாதென்ற அக்கறையும், கவலையும் எனக்கு இருக்கக்கூடாதா?"

'டைம்ஸ்-க்கும் அதன் பிடிவாதக்கார ஆசிரியனுக்கும் சில கொள்கைகள் உண்டு. உன் நன்கொடையை ஏற்க முடியாது.

'இப்படிச் சொல்வது உண்மையாயிருந்தால் இன்று வரை சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரை நீங்கள் என்னிடம் பிடிவாதமாகத் திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும்...'

"'என்ன உளறுகிறாய்? எதற்காக உனக்கு நான் முப்ப தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும்:

“எத்தனை, எத்தனையோ பெயர்களில் நான் யார் என்று காண்பித்துக் கொள்ளாமலேயே-ஆயிரக்கணக்கான ரூபாய்களையும், பொன் வளையல், பொன் மோதிரங்கள், வைர நகைகள், என்று என்னுடைய சகல ஐசுவரியங்களை யும், நீங்கள் 'டைம்ஸு'க்கு நிதி கோரி எழுதி அறிக்கை விட்டபோது பல ஊர்களிலிருந்து அனுப்பியிருக்கிறேன்; என்னுடைய இந்த நன்கொடை மறுக்கப்படுமானால் அவையும் மறுக்கப்படத்தானே வேண்டும்? இதோ நானே அப்படி அவற்றை அனுப்பியதற்கான தபால் இரசீதுகள்: பிரயான டிக்கெட்டுகள்-எல்லாம் பத்திரமாக வைத் திருக் கிறேன்...' . . . . . - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/254&oldid=590631" இலிருந்து மீள்விக்கப்பட்டது