பக்கம்:நெற்றிக்கண்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 89

புகழ்ப்பசி: வயிறு பசித்தவர்கள் பணப்பசி பிடித்து அலை கிறார்கள். பணப் பசி தீர்ந்தவர்கள் புகழ்ப்பசி பிடித்து அலைகிறார்கள். வயிற்றுப் பசி தீர்ந்து கையில் வசதிப்பசி பிடித்ததும் புகழ்ப்பசி கோரமாக வாயைத் திறக்கிறது. இந்தியாவின் நகரங்களில் செளகரியமுள்ள மனிதர்களுக்கு இப்போது புகழ்ப்பசிதான் பிடித்து ஆட்டுகிறதென்று தோன்றியது. சிலரைப் புகழ்வதற்காகவே பல கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சுதந்திரப் போராட்ட காலத் தில் கூட்டம் கூடிச் செயலாற்ற வேண்டிய அவசியம் இருந் தது. அந்தச் சுதந்திர இலட்சியம் கைகூடிய பிற்கோ, மணி தர்கள் தனித்தனியாகவும் அந்தரங்க சுத்தியோடும் இன்று ஆநாட்டுக்குக் கடமையாற்ற வேண்டியிருக்கிறது. கூட் .டங்கள் அந்தத் தனித் தனிக் கடமையுணர்ச்சியை மறக்கச் செய்துவிடுவதாகத் தோன்றியது சுகுணனுக்கு. அன்று அந்தக் கூட்டம் முடிந்ததும் சுகுணனின் மனத்தில் இத் தகைய உணர்வுகளே மேலோங்கியிருந்தன. யாரோ ஒரு நடிகரிடம் நிறைய நன்கொடை வாங்கிக்கொண்டு அவரைப் புகழ வேண்டிய கட்டாயத்துக்காகவே அவர்கள் அந்த வாசகசாலை ஆண்டு விழாவை நடத்தியிருப்பதாக இப் போது உணர்ந்தான் அவன். -

கூட்டம் முடிந்ததும் துளசியும் அவள் கணவனும் மேடையருகே வந்தார்கள். பே டையருகில் ஆண்கள் கூட் டம் அதிகமாக இருந்ததனால் துளசி சிறிது தொலைவில் ஒதுங்கியே நின்றுகொள்ள வேண்டியதாயிற்று. அவள் தன் கணவனிடம் ஏதோ சொல்லி மேடைக்கு அனுப்பினாள். துளசியின் கணவன் மேடையேறி வந்து புன்முறுவலோடு தன்னைத்தானே மீண்டும் அறிமுகம் செய்துகொண்டு .சுகுனனைச் சந்தித்தான். சுகுணனும் அந்த இளம் நண்ப ரைப் புன்முறுவலோடு வரவேற்றான். 'உங்களைத் திரு வல்லிக்கேணியில் டிராப்' செய்துவிட்டுப் போகிறோம். இன்று உங்கள் பேச்சு மிக நன்றாயிருந்தது. இதை எப்படி ஆயும் தவறவிடாமல் கேட்டுவிட வேண்டுமென்று என்மனைவி ஆசைப்பட்டாள். அவள் ஆசை நிறைவேறியதுடன் இனி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நெற்றிக்கண்.pdf/91&oldid=590461" இலிருந்து மீள்விக்கப்பட்டது