பக்கம்:நேசம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106லா. ச. ராமாமிர்தம்


குரல் கேட்டு நிமிர்ந்து, யாரென்று கண்டதும் எழுந்து தின்றார். 'வக்கீல், டாக்டர், சமையல்காரன் இவாளுக்கு வேளை போது ஏது? புன்முறுவல். ""நாளைக்கு ஒரு முக்கியமான கேஸ், கிரிமினல் கேஸ். ரெண்டொரு பாயிண்டுகளைச் சரி பார்த்துக்கறேன்.” அவள் உள்ளே வரவில்லை. வாசற்படியிலேயே நின்றார். தொடர்ந்து, அவளை மன்னிப்பு கேட்டுக்கொள்வதுபோல்: "நான் பிரதிவாதி கட்சி.’’ 'நீங்கள்தான் கெட்டிக்காராமே! தோற்கப் பொறுக்க மாட்டேளாமே!’ அந்த த்வனியை அவர் கண்டுகொள் ளாமல், பொறுமையாக, "என்னதான் இருந்தாலும் பிரதி வாதி என்றாலே சளைச்ச கட்சிதானே! பலவீனத்தைப் பல மாக மாற்றிக்கொள்ளணும். எதிர்க்கட்சி வக்கீல் ஏற்கெனவே அடாவடிக்கரேன். என் கட்சி பக்கமும் நியாயம் கொஞ்சம், வீக். ’ - 'நியாயத்தில் அப்போ கொஞ்சம், நிறையன்னு இருக்கற நியாயமும் இருக்காக்கும். உண்டு இல்லேதான் எங்களுக்குத் தெரியும். ’’ அவருக்கு முகம் சட்டென்று மாறிற்று. 'வக்கீலுக்கு நியாயம் பெரிசா? சட்டம் பெரிசா?” "ஐ ஆம் ஸாரி. இன்னும் நின்றுகொண்டுதானிருந் தாள். இப்போது அவள் புன்னகை புரிந்தாள். 'இந்த இங்கிலீஷ் இருக்கே, "ஐ ஆம் ஸாரி தாங்க் யூ ரெண்டையும் வெச்சுண்டு எனக்கு நிகரில்லேன்னு உலகத்தையே, திக்விஜயம் பண்ணிடலாம், எத்தனையோ நியாயங்களை அமுக்கிவிடலாம்.' அவருக்கு முகம் இன்னமும் கண்டிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/112&oldid=1403563" இலிருந்து மீள்விக்கப்பட்டது