பக்கம்:நேசம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி107


"ஐ ஆம் ஸ்ாரி-’ ’ "அப்போ உங்கள் 'ஸாரி”க்கு நான் "தாங்க் யூ” சொல் னுைம் இல்லையா?" 'ஐ ஆம் லாரி-’’ அவள் வாய்விட்டுச் சிரித்துவிட்டாள். 'ஆர்மோனியம் சிப்பேர். சரி போகட்டும், மணி என்ன தெரியுமோன்னோ? துரக்கம், ஒய்வுன்னு கிடையாதா? மிச்சத்தை நாளைக்கு." மனுஷனின் முகம் வேதனையில் தவித்தது. 'இல்லை நான் இங்கேயே இருக்கேனே-’’ அவர்களிடையே மெளனம் இறங்கிற்று. தேங்கிற்று. அவருடைய பின்னணியில், ஜன்னலுக்கு வெளியே, பாதி நிலவு கண்ணின் உறுத்தல் சிவப்புடன் உதயமாகிக் கொண்டி ருந்தது. சுற்றி மேகங்கள், பாறைகள், விரிசல்கள், உடைசல் கள் சிதறிக்கிடந்தன, கால், அரைக் கண் செருகலிலிருந்து வெடுக்கென்று. விழிப்பு. பக்கத்தில் அவர் இல்லை. ஆனால் அவள் கை அவரைத் தேடவில்லை. கடியாரம் கர்ர்'ரென்று கரைந்து நாலு அடித்தது. பூக்களில் சில நள்ளிரவில் பூக்கின்றன. சில, விடிவேளை, மற்றும் சில, மதியம். மேலும் சில மாலை நேரம்... எதன் மணம் அவளை எழுப்பியிருக்கும்? விழிப்பு வந்ததும் வராதுமாய், இத்தனை வருடங்கள் கழித்து, அந்த முதலிரவு நினைப்பு வருவானேன்? வியப்பா கிருந்தது. நினைப்பைத் தொடக் காரணம் ஜன்னலுக்கு. வெளியே நிலவின் தேசலாயிருக்குமா? அவர் இப்போ ஆபீஸ் அறையில் இருக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/113&oldid=1403564" இலிருந்து மீள்விக்கப்பட்டது