பக்கம்:நேசம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்வி115


அலைகள் மெதுவாக அடங்க ஆரம்பித்தன. அவர்மேல் எனக்கு இவ்வளவு கோபம் வருவானேன்? மலர்கள் பறிக்கத் தானே இருக்கின்றன? இல்லை, செடியிலேயே பூத்து, வாடி, வதங்கி, கருகி, விருதாவா கன்னி காக்கவா? மாலை, கையில் கம்பும் தும்புமாய், கிழவன் வந்தான். அவளுடன் பேசிக்கொண்டே அவன் கண்கள் சுற்றும் முற்றும் அலைந்தன. "...திமிறிட்டு ஓடிட்டுது. இந்தப் பக்கம் வந்துதா? தஷ்டத்துக்கானும் வித்துத் தொலைச்சுட வேண்டியதுதான். இதை நம்மால் சமாளிக்க ஆவாது." தன்னுள் ஒரு கரும் மகிழ்ச்சி பொங்குவதை உணர்ந் தாள். உடலே பூரித்தது. தேடிக்கொண்டே, தனக்குள் பேசிக்கொண்டே, கிழவன் தொடுவானத்தை நோக்கிச் சென்றான். வேனும் ராஸ்கல், அவனைக் கண்டாலே ஆகல்லே. இரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்கவில்லை. அவர், கேஸ் நிமித்தம் மாலைதான், வெளியூர் புறப் பட்டுப் போனார். இந்த ஒதுக்கான வீட்டில் இரவில், தனியாக இருந்தும் பழகிப்போச்க. . அவளுக்கே சுபாவத்தில் துணிச்சல் கொஞ்சம் கூடத் தான். பேருக்குத் துனை , வேலைக்காரக் குட்டி: அறை வாசலில், அவளுக்குக் கொடுத்திருக்கும் பாயில், பூனைக் குட்டிபோல் சுருண்டு உறங்குகிறது. குழந்தைதானே! கண்கன் எரிந்தன. அப்புறம் எப்போ கண் தானா அயர்ந்தபோது அசட்டு பிசட்டு என்று ஏதோ கனா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/121&oldid=1403572" இலிருந்து மீள்விக்கப்பட்டது