பக்கம்:நேசம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126லா. ச. ராமாமிர்தம்


எறும்பு ஊரக் கற்குழியும். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்: கொட்டிக் கொட்டிக் குளவியும் தேளாச்சு, பழமொழி வாழ்க! பழமொழியைவிடவா நான் கதை சொல்லிவிடப் போகிறேன்? நமக்கு ஒரு வருடம் தேவர்க்கொரு நாள். எந்தச் செயலிலும் உடல்பாடைக் குறைத்துக்கொள்ள வழிகளைத் தேடித் தேடிச் சாதிக்கச் சாதிக்க, அதன் வினை வால் மிஞ்சிப்போகும் வேளையும் சுலபமாகிவிட்ட இந் நாட்களில், நாளுக்குச் சமகதி போய்விட்டது. ஒரு சமயம் ஒருநாள். இன்னொரு நாளைக் கட்டி இழுத்துச் செல்கிறது. இன்னொரு சமயம் ஒருநாள் இன்னொரு நாளை முதுகில் தள்ளி தான் முன்னிட அவசரப்படுகிறது. ஆனால் அந்த நாட்கள் அப்படியில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய்த் தேவர் நாட்கள் பதினைந்து ஒடியே போய் விட்டன. அந்த வயிற்றில் அந்த வித்துக்கு முளைத்தது சாதா வாகுமா? ஏற்கெனே ராஜ பரம்பரை, துப்பாக்கி வயிற்றில் பீரங்கி, தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி. அவரை போட்டால் துவரை முளைக்குமா? -மகன்- (காலியிடங்கள் வாசகருக்கு. வாடகைஇஷ்டத்துக்கு திரப்பிக்கொள்ள.) பழமொழி வாழ்க ஆனால்... பழமொழிகள் இருக்கின்றன. கூடவே, ஆனால் என்பதும் உண்டே உண்டென்று உளனெனில் ஆனாலும் உண்டென்பது உள்ளளவும் உண்டு. (சபாஷ் என் முதுகுதட்டுவதுடன் இருக்கட்டும்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/132&oldid=1403584" இலிருந்து மீள்விக்கப்பட்டது