பக்கம்:நேசம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8லா. ச. ராமாமிர்தம்


நாளைக்கு, மறுநாள் பாங்க் விடுமுறை. அதற்கு அடுத்த நான்தான் செக் ஆரியரிங் இல் வரும். வந்தால் உங்கள்ை நிச்சயம் கான்டாக்ட் பண்ணுவாள்.' என்ன சொல்கிறான்? புரியவில்லையே! அப்பா, உங்கள் கையெழுத்தில் 'டி'க்கு நீங்கள் கிராஸிங் கொடுப்பேள். டி இல் விழுந்து வளைந்து உங்கள் கையெழுத்தை அடியில் கிண்ணம் மாதிரி ஏந்தும் ஹைலி இண்டுவிஜ்வல் ஸ்டிரோக் அது. எனக்கு முழுக்க அமைய வில்லை. அப்பா!' மைகாட் பிடரி விரைந்து கைகள் முஷ்டித்தன. 'அப்பா, உங்களுக்கு எப்படியிருக்கும் என்று எனக்குப் புரியாமல் இல்லே. ஆனால் இந்த மாலம் டிமாண்டு ஜாஸ்தி." இவன் சம்பாதிக்க ஆரம்பித்து ஆறு மாசம் ஆகிறது. சம்பளத்தில் கால்காக இன்னும் கண்ணில் காட்டவில்லை அதற்குள்-'மைகாட்" 'நான் நேரிலே உங்களைக் கேட்டிருக்கலாம். ஆனால் எனக்கு 'தில் இல்லை. நான் செய்வது சரியென்று சொல்ல வில்லை. ஆனால் நீங்கள்தான் கவர் பண்ணனும். மனுநீதி கண்ட சோழனின் மறுபிறவி நான் என்று ஏதேனும் ஏடன் கோடம் பண்ணினேலோ வந்தது உலை என் வேலைக்கு. கம்பிகூட எண்ணுவேனோ என்னவோ? அப்புறம் உங்கள் அந்தஸ்து என்ன ஆகிறது? நம் குடும்ப கெளரவம் என்ன ஆகிறது? எனக்கு வேறே வரன் வந்துண்டிருக்கு. சிந்தித்துப் பார்க்க வேண்டியவர் இனி நீங்கள்தான். படபடவென்று சொல்லிக்கொண்டே கீழ் இறங்கிப் போய்விட்டான். . மைகாட் மைகாட்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/14&oldid=1403438" இலிருந்து மீள்விக்கப்பட்டது