பக்கம்:நேசம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா157


ஹில்வா-ஒரு துண்டு இப்படித் தள்ளு-பாலாவுக்குத் தெரிய வேண்டாம். தெரிந்தால் இரண்டு பேரையும் கிழித்து மாலை யாகப் போட்டுக்கொண்டு விடுவாள்! " என் பின்னால் நிழல் அரவம் கேட்டு (?) திரும்புகிறேன். என் பின்னால் மார்மேல் கை கட்டிக்கொண்டு நிற்கிறாள். அவள் புருவங்கள் மின்னல் கொடுக்குகள்போல் நெரிகின்றன. காளியாக மாறிவிடுவாளோ? முகம் தழல் வீசுகிறது. எப்பவுமே அவளைக் கண்டால் ஒரு பயமாய் தானிருக் கிறது. ஏதோ ஒரு அணுகாத் தன்மை அவளைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது ஆமை ஒடுபோல் அவள் அதைச் சுமந்துகொண்டிருக்கிறாளோ? ராவணன் தன் கூந்தலைத் திண்டியதால், தன் கையே வாளாக மாறி அதை வெட்டி யெறிந்து அக்னிப்ரவேசம் செய்த வேதவதி போல நல்லவேளை ஒன்றும் நேரவில்லை. படிப்படியாக நெற்றி வில் மூட்டம் அடங்குகிறது. - உஸ்-எனக்கு நெற்றி கசகசத்திருக்கிறது. நெஞ்சு முள்ளில் ஏதோ சொல் தாண்டி இடறுகிறது. இங்கு நான் வந்து எத்தனை நாளானாலும் சரி, இங்கு என்னவோ, எதுவோ எங்கோ சரியாயில்லை. விளக்கம் கேட்க எனக்கு தைரியம் இல்லையே! அது ஒரு விஷயத்தில் மட்டும். ஏதோ கதவடைப்பு உணர்கிறேன். பயமாயிருக் இறது. என்ன பயம்? ஏதோ பயம். "தொந்தி என்று பார்க்கிறாயா அம்பி மானேஜர் தடவிக்கொடுக்கிறார். 'இதனுள் வைத்தியனுக்குத் தெரியாததெல்லாம் இருக்கிறது. கண்ணாடித் துண்டுநெருஞ்சி முள்-திரியெரிந்து கொண்டிருக்கும் பாம், என் றைக்கு வெடிக்கப் போகிறதோ?” மனிதன் சிரிக்கிறான், பயமாயிருக்கிறது. t, iğoğÍT:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/163&oldid=1403615" இலிருந்து மீள்விக்கப்பட்டது