பக்கம்:நேசம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158லா. ச. ராமாமிர்தம்


என்னிலும் மூத்தவள். நிச்சயம் மூணு நாலு வயதேனும் மூத்தவள். int Gargosl-sir Godown inspectiongfégie Gurig றேன். கிடங்கு சோதனை என்று அப்பட்ட மொழி பெயர்ப்பு ஆனாலும், இந்த அடைமொழியில் பொதுவாக வங்கியில் துடன் வாங்கியவர்களின் பலவிதமான அடமானங்களின், சரக்குகளை மானேஜர் மாதம் ஒருமுறையேனும் நேர்முக மாக கண்காணிப்பது அடங்கும். அடமான சரக்குகள் எல்லாமே வங்கியின் பூட்டுச் சாவியின் பத்திரத்துள் அடங்கா அடங்க இயலாது. தவிர, விவசாயக் கடன், பயிர் செய்ய, கிணறு வெட்ட, ஏற்கனவே இருக்கும் கிணறு ஆழப்படுத்த, பம்பு செட்டுகள் வாங்க, காற்றில் ஆடிக்கொண்டு அறுவடைக்குக் காத்திருக் கும் நெற்கதிர்மேல், இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பாடம் சொல்கையிலேயே பாடம் சொல்லிக் கொள்கிறேன். இதற்கெல்லாம் தனித் தனி இப்படி இப்படி என வங்கியில் விதிப் புத்தகம் இருக்கிறது. ஆனால் நடைமுறைக் கும் விதிக்கும் சம்பந்தமில்லை. எல்லாம் ஏட்டுச் சுரைக்காய். 'கை சுத்தமாய் விரல் வழி வழியாமல், பார்த்துக்கொள். தலை நிமிர்ந்து நடக்கிற மாதிரி பார்த்துக்கொள். மிச்சம் முன்னே பின்னே இருந்தால் அக்கறை இல்லை (மானேஜர்) டாக்ஸி வங்கி வாசலில் நின்றது. அம்பி நீயும் ஏறு. வழியில் மண்டையைப் போட்டேனா அால் தானாக விழுந்தோ கடன்காரன் அடிச்சோ வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டாமா? இல்லை முதல் அடி விழுந்ததுமே டிரைவருடன் நீயும் சேர்ந்து கம்பி நீட்டி விடுவியா? என்ன முழிக்கிறாய்? நடக்காததைச் சொல் றேனா, நடக்கக்கூடாதா இதெல்லாம்? சரி சரி, அந்த வெற்றிலை செல்லத்தை மறக்காமல் காரில் எடுத்து வை.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/164&oldid=1403616" இலிருந்து மீள்விக்கப்பட்டது