பக்கம்:நேசம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா159


மானேஜர் ரொம்பவும் குதப்புகிறார். ரொம்பவும் புகையிலை போடுகிறார். தஞ்சாவூர் ஸைட் அப்பா! தாய் வழியில் மலையாளம் கலப்பு கேட்கனுமா? நல்ல சிமிட்டி ரோடு. டாக்ஸி வெண்ணெய் போல் வழுக்கிக்கொண்டு போகிறது. ரோடு வளைவில் ஒரு காத்து மேடு, பழுத்த பொற்கதிர்களைப் போர் அடித்தாகிறது. பிற்பகல் மூன்று மணி வெய்யிலில் ஒரு கறுப்பு மேகத்துக்குத் தங்கவிளிம்பு கட்டியிருக்கிறது. தலைக்குமேல் உயர துக்கிய முறங்களினின்று நெல் ஒரே சீராக அலைதாய்ந்து, முறத் துக்கும் தரைக்குமிடையே, பிற்பகலில் வெய்யிலில் ஒரு பொன் திரை மின்னிப் படர்ந்து ஆடுகையில் நெஞ்சை என்னவோ பண்ணுகிறது. அன்று அவள் கூந்தலை வாரி முடிக்கையில் அகஸ்மாத் தாகப் பார்க்க நேர்ந்தது. சீப்பு தலையின் நடு வகிடினின்று. உழுதுகொண்டே கீழிறங்கும் ஒவ்வொரு தடவையும் அதற்கு ஒரு பிரயாணம். கை அலுத்துவிட்டாற்போல் கூந்தலைச் சட்டென முறுக்கிச் சுற்றி முடிந்து, நுனியை வெளி வாங் கியதும் பட்சி அவசரமாகத் தன் கூட்டுக்குள் நுழைந்தா ற் போல் தோன்றிற்று. பற்களிடையே தொண்டை ஊசி கூந்தலை அள்ளிக் கொண்டையிட உயரத் தூக்கிய கைகள் அக்குளில் ரவிக்கைக்குமேல் வேர்வைத் திட்டு. -அச்சமயம் நான் நேர்முகமாக இருந்திருப்பின் சிற்பத் தின் சீற்றத்தில் என்னவாகியிருப்பேனோ? யஸ்மம் நாதமுனி நாயக்கர் தொந்தியில் துணி சரிய கூப்பிய கரங்கள் ஓடிவந்து 'ஐயா வாங்க. வண்டிக் கதவைத் திறக்கிறார். மானேஜர் மெதுவாக இறங்குகிறார். என்ன நாயக்கர்வாள்? செளக்கியம் எப்படி? "ஐயா உருவத்தில் ஆண்டவன் கொடுக்கும்போது எனக்குக் குறை ஏது? ஐயா மகனுங்களா? படிப்பு முடிஞ்சு இன்னப்யா வந்திருக்காரா'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/165&oldid=1403617" இலிருந்து மீள்விக்கப்பட்டது