பக்கம்:நேசம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலா163


நாற்காலியில் மாமி வீற்றிருக்கிறாள். அடையாளம் விசாரிக்கத் தேவையில்லை. இப்போது கடைந்தெடுத்த பொம்மை பாலா அந்த வயதுக்கு அப்படி ஆகிவிடுவாள். நான் ஆகிக்கும் வரை தூப தீப உபசாரங்கள் அந்தப் போட்டோவுக்குத்தான்! பூஜை அறை அநேகமாக மூடித்தான் இருக்கும். திறந் திருக்கும் நேரங்கள் அரிது. ஒரு சமயம் அந்தப் பக்கமாகச் செல்ல நேர்ந்தபோது பூஜை அறை திறந்திருந்தது. கைகளைக் கோர்த்த வண்ணம் மானேஜர் மாமிக்கெதிரே நிற்கிறார். அடக்கிய அழுகையில் அவர் இழுதடு பிதுங்கி நடுங்குகிறது. கண்களில் வேதனை. அவர்களுக்குள் அந்தரங்க வேளை சத்தம் செய்யாமல் பின் வாங்குகிறேன். இங்கு என்ன குறைவு? ஆனால் இழுத்துப் பிடித்து முறுக்கேறிய தந்தி எப்போ அறுந்து டோமோ? அறுந்தால் முகத்தில் எப்படி அடிக்குமோ? என்னுடைய சேமிப்புக் கணக்கில் தொகை: கூடிக் கொண்டே, உயர்ந்துகொண்டே போகிறது. செலவுக்கு வழியில்லை. மானேஜர் அபத்தியம் பண்ணிக்கொண்டுதாணிருக் கிறார். "ஆட போடா, அம்பி அலுத்துக்கொள்கிறார். "நான் இனிமேல் நாக்கைக் கட்டி வயிற்றை இழுத்துப் பிடிச்சு என்ன வாழறது?’ எனக்கு விழி ததும்புகிறது. ஆனால் நான் என்ன செய்யட்டும்: 総.g f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/169&oldid=1403621" இலிருந்து மீள்விக்கப்பட்டது