பக்கம்:நேசம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172லா. ச. ராமாமிர்தம்


"ப்ரமோஷன் பண்ணினதும் இங்கே இருக்கமுடியாது. வெளியூருக்கு-’’ "நான் எங்கேயும் போகல்லே ஸ்ார். எனக்குப் ப்ரமோஷன் வேண்டாம். மானேஜர் திரும்பிய வேகத்தில் சுளுக்கு திரும்பிக் கொண்டது. "என்னடா உளர்றே; ப்யூனாகவே ஆயுசுக்கும் காலம் கடத்தப் போறயா? வாழ்க்கையில் முன்னேறப் பார் -என்ன கண்ணில் துளும்பல்?’ முறுவலிக்கிறார். அப்பா, இந்தச் சமயம் இவருக்கு எவ்வளவு அழகான முகம்! ஆனால் என்ன, அவர் புன்சிரிப்புக் கண்டதும் என் உதடு அதிகம் பிதுங்குகிறது. என் அறைக்கு ஒடிப்போய் கதவைத் தடால் என்று மூடிக்கொண்டதும் மேஜைமேல் முகம் கவிழ்ந்ததும் அம்மாடி-அழுகை, சத்தம் போட்ட அழுகை எவ்வளவு பெரிய விடுதலை! "'உங்களுக்குப் புரியல்லே ஸ்ார். கருணையினாலேயே கொல்லும் இந்த வீட்டுக்கு ஏன் வந்தேன்?" கருணையும் இரக்கமற்றதுதான். இதென்ன பிதற்றல்? எனக்குப் புத்தி நழுவிக்கொண் டிருக்கிறதா? ஏ .ெ ன ன்று தெரியவில்லை. இப்பொழுதெல்லாம் தனிமையை வெகுவாய் விரும்புகிறேன். முத்தையாவின் தென்னந்தோப்பில் கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தபடி அல்லது படுத்தபடி தென்னங்கீற்றுகளிடையே குலை முடிச்சுக்களைப் பார்த்துக்கொண்டு. தனிமிையின் சுழிப்பு என்னைத் தன்னுள் இழுக்கிறது. சப்பாத்திப் புதர், ஆற்று மணல். காடென்று சொல்ல முடியாத தாவர அடர்த்தி நடுவில் ஒற்றையடிப் பாதை வெறிபிடித்து நடக்கிறேன். நடந்துகொண்டே இருக்கிறேன். தப்பிய வழி. இங்கு நான் எப்படி வந்தேன்? திகைப்பு. ஒய்ந்த நேரங்களின் நடைமுறையாகி விட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/178&oldid=1403632" இலிருந்து மீள்விக்கப்பட்டது