பக்கம்:நேசம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாவின் மீசை மணியடித்துப் பள்ளிக்கூடம் விட்டானபோதிலும், அறுத்துவிட்ட கன்றுக்குட்டி மாதிரி வீட்டுக்கு ஒட, அன்று அவனுக்கு மனமில்லை, புத்தகப் பையைத் தோளில் தொங்க விட்டுக்கொண்டு, .ெ கா. ஞ் ச ம் யோசனையாகவேதான் திடததான காலையில் வீட்டைவிட்டு வரும்போது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. எப்படி ஆரம்பித்ததென்றே சரி இாய்த் தெரியவில்லை. முயன்றுகொண்டிருந்தான். மத்துப் போட்டுக் கடையும்போது மோர் சுழல்வது போல், கொஞ்சநேரமாகவே அம்மாவுக்கும் அப்பாவுக்கும். இடையில் ஏதோ பொருமிக்கொண்டிருந்தது. இன்னதுதான் என்று சரியாய்த் தெரியாமல் வார்த்தை தடித்துக்கொண்டே போயிற்று. அப்பாவின் குரல் சற்று உரத்திருந்தது: அம்மா வின் குரலோ அறுத்தது தெரியாமல் ரத்தம் துளிக்கும் கத்தி யின் கூர்மைபோல், நயத்திருந்தது .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/19&oldid=798975" இலிருந்து மீள்விக்கப்பட்டது