பக்கம்:நேசம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50லா. ச. ராமாமிர்தம்


அதுவும் இந்த வயசில் எங்களைச் சதையாகப் பார்க்கும் கண் களில்தான் காமம். எல்லாத்துக்கும் அதனதன் வயசு காலம் இல்லையா? பெத்ததும் குறைச்சல் இல்லை. ஆனால் மிச்சம் ஒண்னுதான் அதுவும் சுவாரஸ்யமில்லை. வெளிக்குக் காட்டிக்கொள்ள முடியாவிட்டாலும் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்ளமுடியுமா? ஆக மொத்தம் எல்லாம் வந்து, போய் நிகரமீச்சம் மாட்டுக்கொட்டாயில் மாடுகூட இல்லை. கொல்லையோரம் ரெண்டு தென்னை, அதில் ஒண்னு மலடு. இன்னொன்னுக்கு மூக்கில் வேர்த்து, முகம் தெரியாப் பங்காளி வந்துடறான். ராத்ரி பங்காளி, கிணற்றில் கற்கண்டு மாதிரி ஜலம். தாகத்துக்கு அக்ர ஹாரமே இங்கேதான் மொள்ளறது. வேலியோரம் அரச மரத்தடியில் பாம்புப் புத்து: பாம்பை யாரும் பார்த்த தில்லை. ஆனால் புற்றுக்குப் பால் ஊத்தறவாளும் பிள்ளை வரம் வேண்டிக்கறவாளும் குறைச்சலில்லை. மிஞ்சினது இதுதான். இதில் 'நீ எனக்கு, உனக்கு நான்" தவிர நமக்கு என்ன இருக்கு? ஆனால் அதிலும் வேளை கண்ணைப் போட்டுடுத்தேடி! துளசி மாடத்துக்கு விளக்கு வைக்கப் போனவள், "காவில் சுருக்குன்னுது , கல்லா முள்ளா? கேள்வியிலேயே உனக்கு வாய் குழறிடுத்து எனக்கு ஜாடை காட்டி என் மடியில் தலைவெச்சுப் படுத்து கண்ணை மூடி காலை நீட்டினவள் அப்படியே நீளமாகவும் ஆயிட்டே. அடிநேசம், பாவி என்னை நாசமாக்கிட்டையேடி! அடக்க முயன்ற அழுகை, விக்கல்களாக மாறி உடலைப் பூகம்பமாக உலுக்கிற்று. அடி நேசம், உன் ஆவி இறக்கையடிச்சுண்டு, நேரே லர்வேசுவரனிடமே போயிடுத்தோ என்னவோ, அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/56&oldid=1403487" இலிருந்து மீள்விக்கப்பட்டது