பக்கம்:நேசம்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கறந்த பால்67


வேலையை விட்டு நிறுத்தும்போது பாங்கு கைக்குக் ஒகாடுக்கும் பணம் எத்தனை நாள் நிற்கும்? எனக்கோ ராஜ வைத்தியம். உட்கார்ந்து தின்னால் குன்றும் குந்துமணி என் சர்வீஸ்-க்கு எனக்குக் குன்றாய்ச் சேரவில்லை. என்னிடம் இப்போ அந்தக் குந்துமணிகூட இல்லை. இந்த சுண்டலும் முறுக்கும் சீடையிலும்கூட முழுக்க வயிறு அலம்ப முடியுமா? விசேஷங்களுக்குப் பங்கஜம் சமைக்கப் போவாள். ஆற்றுக் காரியங்கள் செய்வாள். ஒன்றிரண்டு குழந்தைகளைப் வள்விக்குக் கொண்டுபோய் விடுகிறாள். சமயத்துக்கு ஏன் என்கிறாள். இப்பிடித்தான் பிழைப்பு-நடக்கிற வரைக்கும், டக்இறபடி, இப்போ என் ஊன்றுகோல், சுமைதாங்கி, கண் எல்லாமே அவள்தான். ஆனால் அதற்காக என் ஆயுசுக்கும் அவளை என்னோடே நிறுத்திக்கொள்ள முடியுமா? எனக்குப் பின்? ஆண்டவன் என்ன மாதிரி கண் திறக்கப்போறானோ, இதுவரை தெரியல்லே! அவளுக்குப் படிப்பு ஏறல்லே. பங்கஜம், சொல்றேனேன்னு கோவமோ?" சிரித்தாள். என்னோடு குவாயிட்டுக்கு வரயா?” நாங்கள் மூவரும் திடுக்கிட்டுத் திரும்பினோம். அவன் இருப்பதையே மறந்துவிட்டேன். அவன் விழிகள் அவள்மேல் பதிந்திருந்தன. அவளுக்கு மட்டுமே. இதிசுகள் என்கிறோம். ஒன்றும் தெரியாதவர்கள் என்கிறோம். கறந்த பால் என்கிறோம். ஆனால் அவர்கள் சிக்கனுக்கும் வழியே தனி. எனக்குப் பேச என்ன இருக்கிறது: மேகங்களைப் பிளந்துகொண்டு திடீரென்று சந்திரன் வெளிப்பட்டான். பெளர்ணமி நிலா, கடல், பாற்கடலாகிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/73&oldid=1403503" இலிருந்து மீள்விக்கப்பட்டது