பக்கம்:நேசம்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88லா. ச. ராமாமிர்தம்


ஒஹோ, உன்னை ஜோடி தேடிண்டு வரச்சொன்னாளா? பையனுக்கு முகம் ஆரத்தி கொட்டின மாதிரி ஆகி விட்டது. 'அம்மா செத்துப்போயிட்டா.” சபேசன் கட்டடம் விட்டுப்போயிற்று. கெளரி ஓடிவந்து பையனை அனைத்துக் கொண்டாள். சமையலறைக்குக் கூட்டிக்கொண்டுபோய், உட்கார வைத்துத் தன் கலத்தை அவனிடம் அப்படியே நகர்த்தி, சாதத்தின் மேல் குழம்பை ஊற்றி, அதன்மேல் நெய்யையும் -சுண்டின கீரை, பையன் சாப்பிட்டு மூணு நாளாயிற்று. பிறகு தேம்பல்கள், விசும்பல்கள், விக்கல்கள். விசிப்பு களுக்கிடையே, கண்ணிரில் நனைந்து உதிர்ந்த வார்த்தை களை, புதிருக்கு விடை தேடுவதுபோல், அடுக்கிச் சேர்த்துப் பார்த்ததில் சாமாவின் கதை முகடு நிழல் தெரிந்தது. பையன் P.U.C. படித்து முடித்திருந்தான். ஒரே பிள்ளை; அம்மா பிள்ளே, அம்மாவுக்குப் புற்றுநோய். செத்து மூன்று வாரம் முடியவில்லை. கடைசிக் காலத்தில் அவள் பட்ட வேதனையிலும் அவனுக்காகத் தன் சிரிப்பைக் காப்பாற்ற முயன்ற வேதனை-பிரிவின் நிச்சயம் தெரிந்து போனதும் ஏற்பட்டுவிடும் அதிக ஒட்டுதல், உடனே பிரிவு, கடைசி நிமிஷம் வரை நினைவு...விவரங்கள் அவிழ, அவிழ, கெளரி அழ ஆரம்பித்துவிட்டாள். அம்மா காரியம் முடிவதற்குள் அப்ப மறு விவாகத்துக்கு ஏற்பாடு பண்ணிக் கொண்டிருப்பது எப்படியோ புரைசல் ஆகிவிட்டது. அம்மா போவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னா விருந்தே சதி நடந்துகொண்டிருக்கிறது. சாமாவுக்கு உள்ளே நரம்பு ஏதோ அறுந்தது. வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/94&oldid=1403524" இலிருந்து மீள்விக்கப்பட்டது