பக்கம்:நேசம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா89


சாமா, தன் அப்பாவைப் பற்றிப் பேசியது அன்றோடு சரி. அன்று தங்கியவன்தான். அவனைப் போவென்று சொல்லவே தோன்றவில்லை, ஸ்ரிமாகரி ஸரிகளிலாகுழந்தைக்கு ஆரம்ப சிகை மலகரி வர்ணம்போல் விஷயம். அவ்வளவு சுலபமாக, எளிமையாக, இயற்கையாகத் தன் வழியில் தானே புரிவு கண்டுவிட்டது. (அல்லது கண்டு கொண்டதாக) பிறகு ஒருநாள், கிணற்றடியில் சொக்காய்க்குச் சோப்பு போட்டுக்கொண்டே, சாமா ஏதோ பாட்டு முனகுவதைக் கேட்டுச், சபேசன் அவனை அழைத்து எதிரே உட்கார வைத்துத் தாஜா' பண்ணி வாய்விட்டுப் பாடச் சொல்லிக் கேட்டதும், பிரமித்துப் போனான். குரலா அது? கிட்டப்பா அம்சம். அஞ்சு கட்டையில் நீர்வீழ்ச்சி கொட்டிற்று, இடை ஆயிடையே மின்னல்கள், ஏதேதோ கலர்கள்... புதையல் கண்ணில் பட்ட பிறகும், வீணாய்ப் போகக் காண்பது பாடத்தில் சேர்ந்தது என்று சபேசனுக்குத் தோன்றிவிட்டது. அன்று மாலையே குருநாதர் படத்தை இருவர் நடுவே வைத்துக்கொண்டு பாடம் ஆரம்பமாயிற்று. கரையில் கிடந்த மீனை அலையில் சேர்த்துவிட்ட மாதிரி பையன் வெள்ளத்தில் நீந்தினான். அம்மா பாடுவாளாம். வீணை வாசிப்பாளாம்! அன்றைய சிட்சை முடிந்ததும், சபேசன், 'சரி சாமா, நாளையிலிருந்து நீ என் வேஷ்டியையும், மன்னி புடை வையும் தோய்த்துப் போட வேண்டியதுதான். குடலை வாங்கித் தாரேன். எங்கிருந்தாலும் பூப்பறிச்சுண்டுவரனும், தெரிஞ்சுதா? நான் பூஜை பண்ணாவிட்டாலும், அவளுக்குக் கொண்டைக்காச்சு.” சாமா முகத்தில் குங்குமம் பிரிட்டது. கை கூப்பிக் கொண்டான். நாத் தழுதழுக்க: அண்ணா உங்களுக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/95&oldid=1403525" இலிருந்து மீள்விக்கப்பட்டது