பக்கம்:நேசம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈ ஜகமுலோ திக்கெவரம்மா93


"ஓஹோ அப்படிப் போறதா விவகாரம்?" 'அண்ணா, உங்களை நான் அண்ணா என்கிறேன், அப்போ அக்கா எனக்கு மன்னியா? அக்கா, உங்களை அக்கா என்கிறேன. அப்போ அண்ணா எனக்கு அத்திம்பேரா?' ' சாமா முகத்தில் உண்மையாகவே குழப்பம் தெரிந்தது. அதில் எப்பவுமே ஒரு மதலைத் திகைப்பு. ஜாடையாகத் தான். ஆனால் அதைவிட்டு அவன் வளரவே முடியாத மதலை : "அதோ அந்தப் பாட்டியைக் கேளு.’’ "அதன் பேருதான் முறை தெரியாக் கதை' என்று பதில் அளித்துக்கொண்டே கெளரி வாளித் தண்ணிரைத் திடு திப்பெனத் தலையில் ஊற்றினாள். இதுபோல் சமயங்களை மறக்க முடியுமா? அந்தச் சமய மலர்ச்சியில் நாம் ஆயிரம் சொல்விக் கொள்ளலாம். ஆனால், சமயங்கள் மறக்கத்தான் இருக் கின்றன. அப்பப்போ, அப்பப்டோ-அதுதான் சமயம். சமயம் நின்றவிடத்தில் நின்றுவிட்டால் உலகம் எப்படி நகரும்? இரவு பகலாவது எப்போ பிறப்பு, வளர்ப்பு, சாவு, நல்லது, பொல்லாது. கலியாணம், கார்த்தி மறுபடியும் குழந்தைகள்...பழையன கழிதலும் புதியன புகுதலும். நினைவும் மறதியும் ஒன்றுக்கொன்று மாற்று. நினைவு மறதி யின் அடிவயிறு. "மருமகளே, மருமகளே வா வா!’ கெளரி, உற்சாக மாக, பரவசத்தில் பாடினாள் 'வலது காலை முன் எடுத்து வாழ்விக்க உள்ளே வா-' உள்ளே வந்ததும் மணப் பெண்ணை இறுக அனைத்துக்கொண்டாள். அவளுக்குக் கண் கலங்கிற்று. "ராஜி, தெரியுமோன்னோ? நான் உனக்கு மாமியார் இல்லே; ஒர்ப்படிதான்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/99&oldid=1403529" இலிருந்து மீள்விக்கப்பட்டது