பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


திரும்பும் பொழுது அவர் குழுவில் பலர் ஸ்கர்வி என்னும் வைட்டமின் குறை நோயினால் தாக்கப்பட்டனர். இதனால் 23 பேர் இறக்க நேரிட்டது. இப்பயணத்தினால் குக்கிற்குப் பேரும் புகழும் கிடைத்தது. நீண்ட கப்பல் பயணங்களில் ஸ்கர்வி நோயை ஒழித்த பெருமை குக்கைச் சாரும்.

1772-இல் மீண்டும் குக் ஒரு பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் அண்டார்க்டிக் கடலை ஆராய்ந்தார். அதில் பனிப்பாளங்கள் நிறைய உள்ளன என்று முடிவு கட்டினர். இப்பொழுது தென் பசிபிக் கடல் முழுவதையும் நன்கு ஆராய்ந்தார்.

1776-இல் தம் மூன்றாம் பயணத்தை - இறுதிப் பயணத்தை - குக் மேற்கொண்டார். இப்பயணத்தில் பசிபிக்கில் மேலும் பல தீவுகளைக் கண்டுபிடித்தார். அவற்றில் ஒன்று, தீவுத் தொகுதிகளில் பெரிதான ஹாவாய் ஆகும்.

குக் தம் குழுவினருடன் ஹாவாயில் தங்கிய பொழுது இன்பமும் அமைதியுங் கண்டார். அவர்களது நீண்ட பயணக் களைப்பையும் கசப்பையும் ஹாவாய்த் தங்குகை நீக்கிற்று. ஹாவாய் மக்களும் குக்கைக் கடவுளாகக் கருதி நடத்தினர்.

1779-இல் ஹாவாய்த் தீவை விட்டுக் கிளம்பினர். ஆனால், புயற் காற்று அவர்களது பயணத்திற்குத் தடையாக இருந்தது. குக் தம் குழுவினருடன் ஹாவாய்த் தீவுக்குத் திரும்பினார். இப்பொழுது