பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9

ஹாவாய் மக்கள் குக்குடன் நட்புக் குறைந்தவர்களாகவே காட்டிக்கொண்டார்கள்.

டிஸ்கவரி என்னுங் கப்பலின் படகுகளில் ஒன்றை ஹாவாய் மக்கள் திருடினர். அதை விசாரிக்கச் சென்ற பொழுது, ஹாவாய் மக்களில் இருவர் குக்கைக் குத்திக் கொன்றனர். எந்தத் தீவைக் கடைசியாகக் கண்டுபிடித்தாரோ, அந்தத் தீவிலேயே குக் எதிர்பாராத வகையில் இறக்க நேர்ந்தது. அவர் இறந்த இடத்தில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.

பசிபிக் பகுதிகளைச் சிறந்த முறையில் குக் ஆராய்ந்தார். குக் தம் பயணங்களின் பொழுது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஹாவாய் முதலிய தீவுகளைப் படத்தில் இடம் பெறச் செய்தார். சுருங்கக் கூறின், அவரது பசிபிக் பகுதி ஆராய்ச்சி சிறந்த ஆராய்ச்சி ஆகும்.

கப்பல்

பசிபிக் கடலில் மேரியனாஸ் என்னும் அகழி உள்ளது. இதன் ஆழம் 7 மைல். 1960-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டிரியஸ்டி என்னுங் கப்பல் இந்த அகழியை ஆழம் பார்த்து வந்தது.

கப்பலில் அமெரிக்கக் கடற்படையைச் சார்ந்த டான் வால்சும், சிறந்த கடல் ஆராய்ச்சி விஞ்ஞானியான பிக்கார்டும் சென்றனர். கடலுக்கு அடியில், ஏழுமைல் ஆழம் சென்ற முதல் கப்பல் இதுவே.