பக்கம்:பசிபிக் பெருங்கடல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

கப்பல் கீழே செல்ல 5 மணி நேரமும், மேல் வர 3½ மணி நேரமும் பிடித்தது. இருவரும் கடலின் தரை மட்டத்தில் ½ மணி நேரம் இருந்தனர். பயணத்தின் நோக்கம் ஆழ்கடலைத் துருவி ஆராய்வதே ஆகும்.

இப்பயணத்தினால் கிடைத்த சில செய்திகள் பின்வருமாறு :

300 அடி ஆழத்தில் வெப்ப அடுக்கு ஒன்றுள்ளது. இங்கு நீரின் வெப்ப நிலை குறைகிறது.

600 அடி ஆழத்தில் அடர்ந்த அந்திக் கருக்கல் மண்டலம் உள்ளது. இங்கு நிறங்கள் சாம்பல் நிறத்தைப் பெறுகின்றன.

1,000 அடியில் ஒளி முழு அளவுக்கு இல்லை. ஒளிவீசும் பிளாங்டான் என்னும் கடல் உயிர்கள் செல்வது தெரிந்தது.

15,000 அடியில் குரல் ஒலி மறைந்தது. குறிபாடுகள் மூலமே செய்தி அறிய முடிந்தது. கீழே செல்லச் செல்ல அழுத்தம் அதிகமாயிற்று. கடலுக்கு அடியில் அழுத்தம் அதிகம் இருந்த போதிலும், அந்த அழுத்தத்தைத் தாக்குப் பிடித்து வாழும் மீன்களும் உள்ளன.

கடல் தந்திகள்

1902 — 1903-இல் பசிபிக் கடலுக்கு நடுவே முதல் கடல் தந்திகள் போடப்பட்டன. ஒரு தந்தி