பக்கம்:பசி கோவிந்தம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பசி கோவிந்தம்

பணமேனடா பணமேனடா பணமேனடா, பயலே? பணத்தாலாசை வளர்ந்தால து

பணக்காரர் மேல் பாயும்! படுவாய்தினம் படுவாய்தினம்

படுவாய், பாடுபடுவாய்! பசித்தாலது பகவான்செயல்,

பஜகோவிந்தம் பாடு! துன்பம், துன்பம்’ என்கிருயே, அக்தத் துன்பத் துக்குக் காரணம் என்ன?-பனந்தான்.

அதற்கும் எனக்கும் ரொம்ப துாரமாச்சே?’ என்று நீ சொல்லலாம். அதனுலென்ன, அந்தப் பணத்தின் வாடையாவது கம் பக்கம் வீசாதா!' என்று நீ கினைக் கிருயல்லவா? அதுதான் உன்னுடைய துன்பத்துக் கெல்லாம் காரணம்! -

இந்த உபதேசத்தை ஆசான் பணக்காரர்களுக்கு மட்டும் செய்யவில்லை; அப்படிச் செய்தால் பகவான் கை விடுவதற்கு முன்னுல் பணக்காரர்கள் அவரைக் கைவிட்டு விடுவார்கள்! அதனுல் பாடுபடுபவர் களுக்கும் செய்கிரு.ர். அதாவது, பணக்காரர்களைச் சத்துருவாகக் கருதாதே; பணத்தைச் சத்துருவாகக் கருது!’ என்கிருர்.

அவ்வாறு கருத வழி என்ன?-எங்கள் ஆசான் சொல்வதைக் கேட்காவிட்டாலும் உங்கள் அன்புக் குகந்த வள்ளுவர் சொல்வதைக் கேளுங்கள்:

இறல் ஈனும் எண்ணுது வெஃகின்-விறல் ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/14&oldid=590878" இலிருந்து மீள்விக்கப்பட்டது