பக்கம்:பசி கோவிந்தம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 பசி கோவிந்தம்

'இந்த அபத்தத்தைச் சொல்ல ஆசான் போதாதா? அதை விளக்க அடியான் வேறு வேண்டுமா?’ என்று யாரும் கேட்டுவிடாதீர்கள் - அ டி ய ர ன் இல்லை யென்ருல் அவர் சொல்லாததையெல்லாம் சொன்ன தாகத் திரித்துச் சொல்ல முடியாது; அப்படிச் சொல்லா விட்டால் ஆசானுக்கு அசட்டுப் பட்டத்தைத் தவிர வேருென்றும் மிஞ்சாது.

அதனுல்தான் இம்மாதிரி விஷயங்களைப் படிக்கும் போதே பக்தியுடன் படிக்க வேண்டுமென்று சொல் கிருே-ம்கேட்டால்தானே?

11

சரி, இதையாவது கேளுங்கள் : உத்தமமான காரியமொன்றை உடனே செய்யுமாறு இங்கே ஆசான் சொல்லாமல் சொல்கிருர்-அதிலும் யாருக்குச் சொல் கிருர்?-செல்வமும் செல்வாக்கும், அழகும் ஆரோக்கிய மும் படைத்த சீமான்களுக்குச் சொல்கிருர்-எப்படிச் சொல்கிருர்?-அடித்துச் சொல்கிருர் :

உத்தமம், உத்தமம், உத்தமம்

உறவை மறப்பதே உத்தமம் ! உத்தமம், உத்தமம், உத்தமம்

துறவி யாவதே உத்தமம் ! உத்தமம், உத்தமம், உத்தமம்

உள்ளதைக் கொடுப்பதே உத்தமம் ! உத்தமம், உத்தமம், உத்தமம்

எத்தரைக் காப்பதே உத்தமம் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/30&oldid=590894" இலிருந்து மீள்விக்கப்பட்டது