பக்கம்:பசி கோவிந்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 பசி கோவிந்தம்

புங்கவரான தங்களுக்குத்தான் தெரியும் என்று அடக்க ஒடுக்கத்துடன் பதில் சொல்! - ம், எந்த ஜன்மத்தில் சேர்ந்திருந்தீர்கள், இந்த ஜன்மத்தில் நீங்கள் சேர்ந்திருக்க?-சொல்லடா, இன்னுமா உன் மூளை குழம்பவில்லை?-அப்படியால்ை கேள்: உன்னு டைய ஆன்மாவுக்கும் உன் மனைவியின்ஆன்மாவுக்கும் என்ன சம்பந்தம்? ஒன்று. மற்றென்றை ஏன் ஒட்டி கிற்க வேண்டும்; இந்த ஜன்மத்தில் மனைவி என்று கருதும் உனக்கும் உன் உயிருக்கும் மற்ருெரு ஜன்மத் தில், முன் அல்லது பின் ஜன்மத்தில் என்ன சம்பந்தம்? ஆன்மாக்களுக்குப் பந்துத்வம் ஏது, பாசர் தான் ஏது? ஒரு ஜன்மத்தில் ஏற்பட்ட நிலையில்லாத ஒரு சம்பந்தத்தைப் பற்றி ஏன் விசாரம்? முடிவில்லாத கால அளவில் ஒர் உயிரின் காலம் எம்மாத்திரம்? கணமே போன்ற ஒர் அற்பம் அல்லவா? உன்னுடைய காலம் முடிந்ததும் உனக்கும் உன் மனைவிக்கும் என்ன சம்பந்தம்? அதைப் பற்றி ஏன் சிக்தனை?-எங்களுக்குப் பயன் தராத-இல்லையில்லை, உங்களுக்குப் பயன் தராத அந்தச் சிந்தனைகளை நீங்கள் விலக்க வேண்டு மல்லவா?

மனைவியின் விஷயமே இப்படியென்ருல் பணத் தைப் பற்றி என்ன கேள்வி-? அது ஒர் உயிரற்ற பொருள்தானே?-அதற்காக நீ உயிரைக் கொடுத்தது ஒரு பக்கம் இருக்கட்டும்; அதை இப்போது நினைத்துக் கொள்ளாதே!-அது ஒர் உயிரற்ற பொருள்தானே?ஆமாம்” என்று சொல்; அப்பொழுதுதான் வியாகர ணத்தைத் தொடர்ந்து செய்ய முடியும்-சரி, சொல்லி யாயிற்ரு?-உடலை விட்டு வெளியேறின உனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? அதைப்பற்றி என்ன கவலை, உனக்கு? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/38&oldid=590902" இலிருந்து மீள்விக்கப்பட்டது