பக்கம்:பசி கோவிந்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 3?

என்ன, ஒன்றும் புரியவில்லையா? எல்லாம் ஒரே குழப்பமாயிருக்கிறதா?-ஆஹா அதுவே வேதாந்த கிலை, அதுவே வேதாந்த நிலை, அதுவே வேதாந்த ઝિર્ટ છ!

இத்தகைய பரவச நிலையை நாம் அடைவதற்கு விரோதமாயிருப்பவர்கள் யார், தெரியுமா?-படிக்காத புத்திசாலிகள்'தான். அட, சரித்தான் போய்யாஎவளாயிருந்தாலும் அவளைக் கை பிடிச்ச தோசத் துக்குக் கஞ்சி வார்க்க வேணும்? இருக்கிறவரையிலே *நீ என் பெண்டாட்டி, கண்ணுட்டி’ங்கிறது; போறப்போ நீ யாரு, நான் யாரு?"ன்னு கேட்டுப் புள்ளே குட்டிகளை யெல்லாம் நடுத்தெருவிலே விட்டுட்றதா?-கல்லாயிருக்கே, உன் ஞாயம்-? போய்யா, போ!' என்று அவர்கள் கம்மை விரட்டி

விடுகிறர்கள்.

இவர்களுடைய மூளையை நாம் குழப்புவது எப்படி? இவர்களுடைய மடியிலே இவர்களுக்குத் தெரியாமல் காம் கையை வைப்பது எப்படி?- ஐயோ, என் ஆசானே! நான் என்னடா, செய்வேன்?

அஞ்சற்க; படித்த புத்திசாலிகள் நமக்குப் பக்கத் துணையா யிருப்பார்கள்’ என்கிருயா?-ஆமாம்அவர்கள் நல்லவர்கள்; ரொம்ப நல்லவர்கள்; ரொம்ப ரொம்ப கல்லவர்கள்-வயது இடங் கொடுக்கும் வரை அவர்கள் வாழ்க்கையை அனுபவித்து விட்டு, வயது இடங் கொடுக்காதபோது வேதாந்த விசாரத்தில் இறங்கிவிடுவார்கள்; புதுப் புது ரகசியங்களை யெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/39&oldid=590903" இலிருந்து மீள்விக்கப்பட்டது