பக்கம்:பசி கோவிந்தம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 பசி கோவிந்தம்

அவர்தான் வரவே யில்லையே? என்ற ஐயம் வேண் டாம்; அவர் வந்தாலும் வராவிட்டாலும் நீங்கள் பக்தி நிலைக்கு அவசியம் வந்துவிடுவீர்கள்-அதாவது, பைத்தியக்காரணுகி விடுவீர்கள் என்பது இங்கே உட் பொருள்; எனவே வெளிப்பொருளோடு கிற்க!அத்தகைய பக்தி நிலைக்கு நீங்கள் வந்துவிட்டால் உடனே சக்தி பெற்றுவிடுவீர்கள். அந்தச் சக்தி யின் காரணமாக ஆசைகளை எதிர்க்கும் திறன் வந்து சேர்ந்தோ, அல்லது அதற்கு அவசியமே இல்லா மலோ நீங்கள் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இடம் பெற்றுவிடுவீர்கள்!-அதற்குப் பின் ஓம் சாந்தி, ஓம் சாக்தி, ஓம் சாக்திதானே?-சமூகத்தைப் பற்றி உங்களுக்கும் கவலையில்லை; உங்களைப் பற்றிச் சமூ கத்துக்கும் கவலையில்லை. ஆஹா, அந்த நிலையல்லவா பேரானந்த நிலை?-கூவுங்கள்-ஓ, ஆண்டவா! ஒ, ஆண்டவா, ஒ, ஆண்டவா!

நீங்கள் கூவிக்கொண்டே இருங்கள்; காங்கள் காதும் காதும் வைத்தாற்போல் காரியத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிருேம்.

17

உங்களுக்குத் தெரியுமா, சக்தி எங்கே இருக் கிறது?-அணுகுண்டிலா, ஹைட்ரஜன் குண்டிலா? அ2ணக்கட்டிலா, ஐந்தாண்டுத் திட்டங்களிலா?அவற்றிலெல்லாம் ஒன்றுமில்லை; பக்தியில்தான் இருக்கிறது :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/42&oldid=590906" இலிருந்து மீள்விக்கப்பட்டது