பக்கம்:பசி கோவிந்தம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 4t

சக்தியில்ல்ை சக்தியில்லை

சக்தியில்லை, இல்லையே! பக்தியின்றிச் சக்தியில்லை

சக்தியில்லை, இல்லையே! முக்தியில்லை முக்தியில்லை

முக்தியில்லை, இல்லையே! பக்தியின்றி முக்தியில்லை

முக்தியில்லை, இல்லையே! மனிதன் மண்ணை எப்படி வெல்கிருன்? காற்றை எப்படி வெல்கிருன்? ஆகாயத்தை எப்படி வெல் கிருன்?-எல்லாம் பக்தியால்தான்.

இது என்ன, பச்சைப் பொய்யாயிருக்கிறதே!’ என்கிறீர்களா?-அதுதான் மதம்; அதுதான் சம்பிரதாயம்-அதாவது, அறிவு வேண்டும் ஞானம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டே அவற்றைக் கொஞ்சங் கொஞ்சமாகக் கொன்றுவிடுவது!

சரி, முக்தி எங்கே இருக்கிறது?-ஒரு முழங் கயிற்றிலா, ஒரு துளி விஷத்திலா? பாழுங் கிணற் றிலா, பாதை விபத்திலா?-அவற்றிலெல்லாம் ஒன்று மில்லை; அதுவும் பக்தியில்தான் இருக்கிறது.

சக்தியும் முக்தியும் ஒருங்கே சேர்ந்திருக்கும் இந்தப் பக்தியை அடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும்?-காசிக்குப் போல்ை போதாது; கங்கா ஸ்நானம் செய்தால் போதாது-ஆமாம், எப்பொழு தாவது நாங்கள் போதும் என்று சொல்லி யிருந் தாலும் இப்பொழுது அவை போதவே போதாதுஅதற்குமேல் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?உள்ளத்தில் இருக்கும் பற்றனைத்தையும் ஒழிக்க

- ப.கோ.-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/43&oldid=590907" இலிருந்து மீள்விக்கப்பட்டது