பக்கம்:பசி கோவிந்தம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பசி கோவிந்தம்

விட்டான்?-வாசலுக்கே வந்துவிட்டானு? உள்ளே நுழைய வேண்டியதுதான் பாக்கியா? பாசக் கயிற்றை வீச வேண்டியதுதான் தாமதமா?-கலங்க வேண் டாம்; கவலை வேண்டாம்;

எடுஎடு, எடுஎடு,

கீதையை எடுஎடு!

ւյւգ-ւմւգ-, ւյւգԱւգ-,

ஒருவரி படிபடி! எடுஎடு, எடுஎடு,

கங்கையை எடுஎடு!

குடி.குடி, குடிகுடி,

ஒருதுளி குடிகுடி!

என்ன, குடித்துவிட்டாயா? - அதோ பார் எருமைக் கடாவுக்கு முன்னுல் எமன் எடுக்கிருன் ஒட்டம்!

அவ்வளவுதான்; அதற்குமேல் அங்கே கிற்கா தீர்கள்-என்னவே, செப்படி வித்தை காட்டுதே' என்று எவனுவது திருநெல்வேலி வேளாளன் பாஷை யில் கேட்டாலும் சரி, ஆ பப்பு உடுக்கதண்டி!' என்று எவனுவது சென்னை கோமுட்டி பாஷையில் சொன்ன லும் சரி-காதில் விழாததுபோல் கழுவி விடுங்கள்; இல்லாவிட்டால் எமனை நீங்கள் விரட்டுவதற்கு முன்ல்ை உங்களை அவர்கள் விரட்டி விடுவார்கள்.

அப்படி கழுவ முடியாதவர்கள் எதற்கும் முதுகில் தலையணையைக் கட்டிக் கொண்டு செல்வது நல்லது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/50&oldid=590914" இலிருந்து மீள்விக்கப்பட்டது