பக்கம்:பசி கோவிந்தம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 59

காமமும் ரஜோவேகமும் நீங்கிய சக்தியை மக்க ளிடத்தில் கண்டால் அந்தச் சக்தி நானே என்று அறி வாய்; தருமத்துக்கு முரண்படாத ஆசை மனிதர் களின் உள்ளத்தில் தோன்றில்ை அந்த ஆசை கானே என்று அறிவாய்!”

இவ்வாறு பகவானே சொல்லிவிட்ட பின் அப் பீல் எதற்கு தருமத்துக்கு முரண்படாத ஆசை களுக்குப் பகவான் காரண மென்ருல், தருமத்துக்கு முரண்பட்ட ஆசைகளுக்கு யார் காரணம்?’ என்று நீங்கள் திருப்பிக் கேட்பதுதான் எதற்கு?

அப்படியே திருப்பிக் கேட்டாலும் அதற்குத் தான் அவ்வப்போது தத்துவ ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்கிருேமே, அது போதாதா?-கோயில் திருப்பணி செய்தல், கும்பமேளா கொண்டாடுதல், மடத்தைக் காத்தல், மடாதிபதிகளின் தொக்தியை வளர்த்தல் ஆகிய கான்கும் தரு மத்துக்கு முரண் படாத ஆசைகளென்றும், கல்யாணம் செய்து கொள்ளல், கட்டிக்கொண். மனைவியையும் பெற் றெடுத்த பிள்ளைகளையும் காத்தல், அ ற்காகப் பொருளிட்டல், இதை யாராவது அபகரித்துக் கொள்ளப் பார்த்தால் அவர்களே வெறுத்தல் ஆகிய கான்கும் தருமத்துக்கு முரண்பட்ட ஆசைகளென் றும் சொல்லி, எங்கள் தத்துவ ஒத்தடத்தைப் பிடுங்கி ஏன் விட்டெறிகிறீர்கள்?

அட, பாவிகளா!-அந்த காலுக்குப் பதிலாகத் தான் இன்னுெரு காலை காங்கள் கண்டுபிடித்திருக் கிருேமே, அவற்றை நீங்கள் அப்படியே ஏற்றுக் கொண்டால் என்ன?-பாவம் புண்ணியம், கரகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/61&oldid=590925" இலிருந்து மீள்விக்கப்பட்டது