பக்கம்:பசி கோவிந்தம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பசி கோவிந்தம்

29

திருமத்தைப் பற்றிப் பேசும்போதெல்லாம் இந்தக் காலத்தில் தரித்திரத்தைப் பற்றிப் பேசுவது வழக்க மாகிவிட்டது. அவர்கள் கினைப்பதுபோல் தருமமும் தரித்திரமும் இரண்டல்ல; ஒன்றே. தருமம் தழைத் தால்தான் தரித்திரம் கிலேக்கும்; தரித்திரம் நிலைத்தால் தான் தருமம் தழைக்கும். எல்லோருக்கும் வேலை; எல்லோருக்கும் கூலி என்பதெல்லாம் அர்த்தமற்றுப் போய்ச் சரித்திரம் என்றும் சரியாமல் கிற்கும்-இதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?-பெருமை மிக்க ஆசான் அருமையாகச் சொல்கிருர்:

தருமம் தழைக்கவே

தரித்திரம் நிலைக்கவே, சரித்திரம் என்றும்

சரியாமல் இருக்கவே, பொருளாசை கொள்வோர்,

பொருளாசை கொள்ளவே, அருளாசை கொண்டு

அலைவாய், நீ அலைவாய்!

இந்த விஷயத்தை இதற்குமுன் எத்தனையோ இடங்களில், எத்தனையோ கோணங்களில் ஆசான் உங்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம்; அடி யானும் அதற்குச் சாங்கோபாங்கமாக வியாகரணம் செய்திருக்கலாம். அதனுலென்ன, தமிழ்காட்டில் தான் இப்போது பைத்தியக்காரர்களுக்குப்பஞ்சமாய்ப்போய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/66&oldid=590930" இலிருந்து மீள்விக்கப்பட்டது