பக்கம்:பச்சைக்கனவு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுமங்கல்யன் 0 141

ஆனால் துளசி அழகி. அதுவும் எப்படிப்பட்ட அழகு! முன்னையே பெண்பார்க்கப் போயிருந்தபோது, அவளைப் பார்த்திருந்த போதிலும், அன்று பொலபொலவென விடி வேளையில் பரதேசிக் கோலத்திலிருந்து திரும்பினதும், அவள் உள்ளிருந்து மணக்கோலத்தில் வெளிப்படுகையில், உஷத்காலத்து தேவதையே, ப்ரஸன்மானாற்போல் அல்லவா இருந்தாள். பளிங்கிலடித்த சிலை போன் றிருந்தாள். கடியாரத்துக்குள் அமுக்கி வைத்த எஃகுச் சுருள் போல், இருகாதண்டையும் மயிர் சுயமாகவே சுருண்டு, காற்று மூச்சில் என் மார்போல் படபடத்தது. அவள்மேல் போட்டிருந்த அணிகள் அழகுக்கு அழகு செய்வதுபோல் அர்த்தமில்லாமல் போய்விட்டன. தாழ்ந்த கண்களின்மேல் கவிந்த இமையும், படர்ந்த ரப்பையும் துரக்கவேயில்லை. எப்படித்தான் கலியாணம் முழுவதும், நம் கண்ணில் பட்டவரை அப்படியே தந்தப் பொம்மை மாதிரியிருந்தாளோ?

அன்னிக்கி மாத்திரமா, என்னிக்குமே, அவளோடு வாழ்ந்த பத்து வருஷங்களுமே, அப்படித்தானேயிருந்தாள்: நாளுக்கு நாள், பிறைச்சந்திரன் மாதிரி, கொஞ்சங் கொஞ்சமாய், ஏதோ கணக்கில், கண்பட எப்படியோ தேய்ந்து வந்தாள் வாயைத் திறக்கமாட்டாளா, மஹராஜி! ஏதோ கேட்ட கேள்விக்குத் தலையை ஆட்டியே. எப்படி காலத்தைக் கழித்தாள்? ஏன் பேசாமடந்தையா யிருக்கிறாய் என்று கடிந்தாலும், குபுகுபுவென்று முகத்தில் குங்குமம் குழம் புமே ஒழிய சண்டையாவோ சமாதானமாவோ வாயிலிருந்து ஒரு முத்து உதிராதா? இவளிடமிருந்து ஒரு வார்த்தைக்குக் கூட லாயக்கற்ற: மஹாபாபியா நான்? ஊஹூம்! அவளாலேயே வீட்டில், நம் குரலே நமக்கு இரைச்சலாப் போச்சு.

ஆனால் வீட்டு வேலை செய்யாதவளா, கையா லாகாதவளா, பின்னால் வந்தவளைப் போல் கப்பியா? ஒரு நாளுமில்லை. அப்படிச் சொன்னால் சொன்ன வாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/150&oldid=590808" இலிருந்து மீள்விக்கப்பட்டது