பக்கம்:பச்சைக்கனவு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 0 லா ச. ராமாமிருதம்

புழுத்துப் போகும். நன்றாய்த் தான் உழைத்தாள். மாமியாருக்கும் கொண்டவனுக்கும் செய்யும் பணிவிடை யில் ஒரு குறைவில்லை. ஆனால் ஒன்றிலும் ஒட்டாது உணர்ச்சியின் சூடு இல்லாத உழைப்பிலோ பணிவிடை யிலோ, அதை அடைபவருக்கு என்ன ருசியிருக்கிறது? சந்தோஷமாய்க் கை கொட்டி, கலகலவென்று வாய் திறந்து பல் தெரியச் சிரித்து ஒரு நாள்...? ஊஹஅம்.

அவள் விபரீதம் தான். அவள் தாயார் செத்ததுக்கு அவள் போகவேயில்லை. அன்னிக்கு அழுது காண்பித்த துக்கே அந்த அம்மாள் அவ்வளவு சந்தோஷப்பட்டாளே! அதற்காகாவது போக வேண்டாமோ? தீட்டு உண்டே என்று கூடப் பார்க்காமல் அன்றைக்கு தான் வடாம் பிழியற வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு மாவைக் கிண்ட ஆரம்பித்து விட்டாள். என்னடி துளசி இப்படிப் பண்ணறே? செத்துப் போனது உங்க அம்மாதாண்டி! நீ போகாவிட்டாலும் உங்காத்து மனுஷா எங்களை என்ன சொல்லுவா? ஊஹாம்! அசைந்து கொடுத்தால் தானே?

" அப்பா எ ன் ன த | ன் இருந்தாலும் உன் ஆம்படையாள் கடப்பாறை ககrாயம் போட்டுக் குடிச்சவள் தான்' என்று அம்மா சொன்னது சரியாப் போச்சு,

எல்லாத்துக்குமே அப்படித்தான். ஒட்டிற்குள் நத்தை போல் தனக்குள் ஒரு பத்ரம், ஒரு உணர்ச்சியும் காண்பிக்காத இந்த பொம்மையுடன் குடித்தனம் நடத்தி என்ன சுகத்தைக் கண்டேன்!

ஆனால் ஒரொரு சமயம்- யாரும் இல்லாத சமயத்தில் அவள் ஒட்டிலிருந்து அவள் வெளி வரும் வேளைகளில்... சில மாலைகளில் அவள் தோட்டத்தில் செடிகளண்டை தயங்கி நிற்கையில், மாடியிலிருந்து நான் அவளை கவனிக்கையில், அவள் அழகு அமானுஷ்யத் தன்மையைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/151&oldid=590809" இலிருந்து மீள்விக்கப்பட்டது