பக்கம்:பச்சைக்கனவு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 0 லா. ச. ராமாமிருதம்

'இல்லை இல்லை-’’ வாசற்கதவைத் தாளிட்டு கூடத்துக்கு வந்தான். தண்பர்கள் அவனுக்கு அளித்த பரிசுகள் மேஜைமீது கொலுவிருந்தன. அவைகளைச் சிந்தித்தபடி சற்று நேரம் நின்றான். ஒன்றிரண்டில், அளித்தவனின் குறும்பு மிளிர்ந்தது. -

சந்நேக ரஸம் தட்டு ஒன்றிரண்டு புத்தகங்கள். ஒரு க்ளாக்ஸோ பீடர் புட்டி வெள்ளித் தகடு அடித்த சங்குப் பாலாடை இப்பவே!

ஒவ்வொன்றாய்க் கண் பாய்கையில் ஒரு வெள்ளிக் கிண்ணம் கவனம் கவர்த்தது. கையில் எடுத்தான். நல்ல கனம். அடியில் பாதம் வைத்து, விளிம்பில் எதிருக்கெதிர் இரண்டு வாய்கள். வெளிப்பக்கத்தில் நல்ல வேலைப்பாடு கள். வாயில் ஊன்றிப் போன சிரிப்பு மாறாது, அதைக் கையில் எடுத்துக்கொண்டு மாடியேறினான்.

ஜன்னல் கம்பிகளின்மேல் சாய்ந்து ஜன்னலின் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். அவன் அரவம் கேட்டு, முகம் திரும்பி அவனைக் கண்டு மலர்ந்த புன்னகையில் யோசனை தயங்கிற்று.

மேஜை மேல் கிண்ணத்தை வைத்து விட்டு அவளிடம் வந்தான். அவன் முகத்தைச் சிரிப்பு இன்னமும் அழுந்த உழுதது. அவள் மெளனமும் முறுவலும் கலையாது எழுந்து நின்றாள்.

'எப்படி இருக்கிறது? அர்த்தமற்ற அசட்டுக் கேள்வி யைக் கேட்ட பிறகுதான் தெரிந்தது, எவ்வளவு அர்த்த மற்ற அசட்டுத்தனமானது என்று. அதை மறைக்க, மேஜையண்டை போய், அதில் எரிந்து கொண்டிருந்த ஊதுவத்தியின் தணல் மேல் சாம்பலைத் தட்டினான். உடனே அவன் கையோடு கொண்டு வந்த கிண்ணம் பார்வையை ஈர்த்து, கூஜாவிலிருந்த பாலை அதில் விளிம்பு கட்ட ஊற்றினான். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/161&oldid=590819" இலிருந்து மீள்விக்கப்பட்டது