பக்கம்:பச்சைக்கனவு.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 C லா, ச. ராமாமிருதம்

கவிழ்ந்த தலையுடன் ராஜம் அவளை மாடிக்குத் தொடர்ந்தாள். கொண்டையில் வில்லாய்ச் செருகிய மல்லிகையின் மணம் கம்மென்று சாவித்ரியின்மேல் மோதியது. சாவித்ரி அப்படியே திகைத்து நின்றாள். முற்றத்தில் மரத்தொட்டி ஜலத்தில், நன்றாய்ச் சிறகு களைக் கோதி, மூக்கை உள்ளேவிட்டு அலசி ஆற அமர ஒரு காக்கை குளித்துக் கொண்டிருந்தது. அதை ஒட்ட வேணும் என்று உள் நினைவில் ஒர் எண்ணம் எழுந்து, அவளைத் துரண்டிக்கொண்டிருந்ததே தவிர, அதைச் செயலாக்க உடல் மறுத்துவிட்டது. அதன்மேல் திடீரென ஒண்ான் கொடி படர்ந்தது; மேலே சிலந்திக்கூடு கட்டி, பூஞ்சைக்காளானும் பூத்து விட்டாற்போல் அவ்வளவு புராதன உணர்ச்சி படர ஆரம்பித்தது. முற்றத்தில் ஒரு மஞ்சள் பூனை, மஞ்சள் வெயிலில் வெகு சுகமாய்க் கால்களை நீட்டியபடி உறங்கிக்கொண்டிருந்தது.

மாடியிலிருந்து யாரோ கீழிறங்கி வரும் அரவம் கேட்டது. தன்னை அழுத்தும் சோர்வைப் பிரயத்தனத் துடன் உதறி விட்டு, சாவித்ரி அடுப்பண்டை போய் அதில் கொதித்துக் கொண்டிருக்கும் சாதத்தைக் கரண்டியில் எடுத்துப் பதம் பார்க்கலானாள் ஊரில் சாதத்தைக் கண்ணால் பார்த்தே பதம் சொல்லிவிட முடியும். ஆனால் இந்த அரிசியைக் கையால் நசுக்கிப் பார்த்தால்கூட ஆளை ஏமாற்றிவிடுகிறது:

'அம்மா!'

சாவித்திரி திரும்பிப் பார்த்தாள். சிவராஜன் வாசற். படியை அடைத்துக்கொண்டு நின்றான். அவள் பிள்ளை களுக்குள்ளேயே அவன்தான் வாளிப்பு. அதுவும் இப்போ மாதிரி ஜிப்பாவையும் போட்டுக்கொண்டு சுவர் மாதிரி வெளிச்சத்தையும் மறைத்துக்கொண்டு நின்றுவிட்டால் ஒதுங்குடா என்று யாராலும் சொல்லாமல் இருக்க முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/195&oldid=590853" இலிருந்து மீள்விக்கப்பட்டது