பக்கம்:பச்சைக்கனவு.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவித்ரி 0 193

கனவாய்க் கண்டுகொண்டிருப்பதற்கு மெளன சாகதியாய் நின்றுகொண்டிருந்தது.

பட்டணத்தையே சல்லடை போட்டுச் சலித்தாகி விட்டது. வீடுவீடாய்ப் படியேறிப் பார்த்தாகிவிட்டது. ஊரில் தேடாத போலீஸ் ஸ்டேஷன், குளம், சத்திரம், ஆஸ்பத்திரி பாக்கி இல்லை. பத்திரிகைகளில் விளம்பரம் செய்து ஆகிவிட்டது. மனித யத்தனத்தில் செய்வதில் பாக்கி ஒன்றும் இல்லை. அன்று அவன் மாதிரி எத்தனை பேருக்குக் குழந்தை கெட்டுப் போயிருக்கும்? அவர்களுக்கு எல்லாம் அகப்படவில்லையா? ஆனால் அவளுக்கு மாத்திரம் அவன் குழந்தையின் சுவடு கூடப் பிடிபட வில்லை.

அன்றைத் தினம் அவளை வீட்டில் கொண்டு வந்து சேர்ப்பதற்குள் நாலு ஆண்பிள்ளைகள் சேர்ந்து கட்டிப்பிடிக்க முடியவில்லை. தாய்மை தவிக்கையில் அதற்குத்தான் என்ன அசுர பலம் வந்து விடுகிறது! ஒர் அறையுள் தள்ளிக் கதவை வெளியில் பூட்டிவிட்டார்கள்.

"ஜம்பூ! ஜம்பூ ஐயோ! என்னை வெளியே விட்டுடுங் களேன்! ஜம்பூ ஜம்பூ ஜம்பூ'

அந்த ஒரே அலறல் தான்.

ஜன்னல் பக்கமாய் யாராவது எதையாவது நீட்டினால் தட்டோ தம்ளரோ யாரென்று பார்க்காது வீசி எறிவாள். சுவரிலும் ஜன்னல் கம்பிகளிலும் மண்டையை மோதிக் கொள்வாள். நெற்றி புடைத்துக்கொண்டு ரத்தம் கசிவது கூட அவள் அறிவாள். சமுத்திரம் பற்றிக்கொண்டு விட்டபின் அதை அணைப்பது யார்? அதுவாக அணைந்தால்தான் உண்டு.

நாலு நாட்கள் சேர்ந்தாற்போல் அன்ன ஆகாரம் ஜலபானம் இல்லை. வெறி உடலைச் சூறையாடிவிட்டது.

3 I سس-u_i

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/202&oldid=590860" இலிருந்து மீள்விக்கப்பட்டது