பக்கம்:பச்சைக்கனவு.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 O லா. ச. ராமாமிருதம்

போய் சந்நிதானத்தில் விட்டால் அம்பாளை அவசியம் ஒரு கேள்வி கேட்டாகணும்: 'ஏண்டி அம்மா? ஆனைக் காவலில் அகிலாண்டேசுவரியாய் எழுந்தருளியிருக்கும் உலகத்தாயே! இந்தக் குழந்தை எனக்குப் பிறக்கிறதற்கு முன்னாலே இரண்டு தங்கவில்லையென்று உன் வயிற்றைக் குளிர்விக்க, கற்பாந்த காலமாய் உன் காலடியிலே ஊறிண்டுருக்கிற ஜலம் போதாதுன்னு, தினம் கிழக்குப் பூக்கிறதுக்கு முன்னாலே எழுந்திருந்து ஆத்திலிருந்து ரெண்டு மைல் அகண்ட காவிரிக்கு நடந்து ஸ்நானம் பண்ணிவிட்டு அப்படியே பற்றின மஞ்சளும் ஈரப்புடவையு மாய் ஒரு தவலை ஜலம் இடுப்பில் தாங்கி வந்து உனக்கு அபிஷேகத்துக்கு ஒரு மண்டலம் கொண்டு வந்து வெச்சேனே! இந்தக் குழந்தையை இப்படிப் பிடுங்கிக் கொள்ள வேணும்னுதான் அப்போ அப்படிக் கொடுத் தையா?" -

பிறகு வெகு நாட்களுக்கு அவளைக் காலைக் கடன் களுக்குக் கூடத் தனியாய் விடாமல் அடைகாத்து வந்தார்கள். சில வார்த்தைகளின் சப்தங்கள் கூட அவளுக்கு ஆகாமல் இருந்த நாட்கள் உண்டு. ஜம்பு நாவல் பழத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு தரம் உயிராய் விரும்பி னாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு கண்ணால் காணக் கூடச் சகிக்க முடியவில்லை. ஜம், ஜம்பம் ஜமாய்” இம்மாதிரி வார்த்தைகள், பேச்சு வழியில் ப்ரயோகம் ஆகி விழும் ஒலிகள் கூட ஜம்புவின் பேரை நினைவூட்டிவிடும். பசி, தாகம், பொழுது, அடையாளம் எதுவுமே உணர முடியாத நீண்ட சிந்தனையில் அவ்வொலிகள் ஆழ்த்தி விடும்.

ஆனால் ஜம்புகேசுவரத்தில் ஜம்புநாதனை விட்டு, அகிலாண்டேசுவரியை மாத்திரம் தனியாய்த் தரிசிக்க முடியுமா?

இப்போதுகூடச் சில சமயங்களில் ஸந்நிதானத்தில் நிற்கையில் கண்ணெதிரில் துரிஞ்சில் பறந்தாற்போல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/205&oldid=590863" இலிருந்து மீள்விக்கப்பட்டது