பக்கம்:பச்சைக்கனவு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 29

மயிரைப் பளபளக்க அழுந்தவாரி நெற்றியில் நடுவகிடு: எழுமிடத்திலும், புருவங்களுக்கும் மத்தியில், குங்குமமிட் டிருந்தாள். பவழமாலை அகஸ்மாத்தாய் மேலாக்கின் வெளியே வந்திருந்தது. உள்ளங்கையிலும், கால்விரல் நகங்களிலும் அம்மா ஆசையுடன் இட்டிருந்த மருதாணி பற்றியிருந்தது. இந்நிமிஷங்கூட தடுத்தால், நின்று விடுவாள். -

"போவதற்கிருக்கிறாய். வருகிறேன் என்கிறாயே?’’ என்று விகடமாகக் கேட்கலாமா என்று தோன்றிற்று.

'நான் போவது நீ போகச் சொன்னதால்தானே!" என்று கேட்டுவிட்டால்? எப்படி என் தோல்வியை ஒப்புக் கொள்வேன்?

'ஏன் முகம் வெளுத்திருக்கிறது?' என்றேன்.

'அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போ வரும் சோப் பிலேயே சுண்ணாம்பு அளவுக்கு மிஞ்சிக் கலந்திருக்கிறது. என் கறுப்புக்கூட வெளுக்கும்படியிருந்தால்... உங்களுக்கு. ஏன் கண் சிவந்திருக்கிறது?’ என்று புன்னகை புரிந்தாள்.

"ஆமாம், தூசி விழுந்திருக்கும்' என்று கண்ணைநன்றாய் கசக்கிக்கொண்டேன்.

'போய் வருகிறேன்.'

அவள் ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. இதென்ன வாழ்க்கை இவ்வளவு சூன்யமாய்க்கூட இருக்க முடியுமா என்ன? எதைத் தொட்டாலும் எடுத்தாலும் நினைத்தாலும் அவள் உருவம் இடைமறித்துக்கொண்டு நின்றது- பளபளக்க வாரி முடிந்த மயிரும் நெற்றியில் நடுவகிடு எழுமிடத்திலும் இரு புருவங்களுக்கு மத்தியிலும் இட்ட பொட்டும், மேலாக்கின் வெளியே வந்த பவள மாலையும், உள்ளங்கையிலும் கைகால் நகங்களிலும் பற்றிய மருதாணியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/38&oldid=590696" இலிருந்து மீள்விக்கப்பட்டது