பக்கம்:பச்சைக்கனவு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அபூர்வ ராகம் O 33

ஏன் எங்கள் செயல்கள் அர்த்தமற்றுவிடுகின்றன?

சின்னக் குழந்தைகளுக்குச் சொல்ல, அவர்கள் முழுமன துடன் நம்பும் ராஜா ராணிக் கதைபோல் எங்கள் வாழ்க்கை சிற்சில சமயங்களில் கடற்கரையில், சூரியனுடைய சப்தவர்ண ஜாலங்கள் மிளிர்ந்து, காற்றில் நடுநடுங்கும் அலை துரை போன்ற நலுங்கிய அழகு.

துக்கம் அதிகமானாலும் பைத்தியம்தான். சந்தோஷம் மிஞ்சினாலும் பைத்தியந்தான். பித்துபிடித்தவனும் பைத்தியந்தான். இவர்களில் நாங்கள் எவர்?

கோடை முடிந்து மாரி வந்துவிட்டது.

அம்மா, யாரோ நாலு பேர் தீர்த்த யாத்திரை போகிறார்கள் என்று சேர்ந்து கிளம்பிவிட்டாள். போகும் இடத்துக்குப் புண்ணியம் தேடவேண்டும். சாவிற்கு எப்பொழுதும் தயாராயிருக்கவேண்டும். கடவுளிடத்திலே கணக்குச் சரியாய் ஒப்பித்தாக வேண்டும். இதெல்லாம் அம்மாவின் கொள்கை. இங்கிருக்கையிலேயே மறு உலகின் இந்தைதான் அவளுக்கு. ஆகையால் நான் போகவேண்டும். ஆனால் என் காரணங்களே வேறு என்று புள்ளி போட் டிருந்த இடங்களெல்லாம் பார்க்க அம்மாவுக்குத்தான் வாய்ப்பு முதலில் கிட்டிவிட்டது. தென்னாடெல்லாம் கற்றிய பிறகு காசி, கயா பிரயாகை வரை போய் வருவதாகத் திட்டம். அம்மா எங்களைத் தனியாய் விட்டுச் சென்றதே விபத்தாய் முடிந்தது. மிருகங்களாகிய எங்களைக் கட்டியாள யாருமில்லை.

மழை, அந்த சமயம்போல்- ஆனால் எப்போது பெய்தாலும் அப்படித்தான் சொல்கிறோம்- எப்போதும் பெய்ததில்லை. தெருவில் வெள்ளம் முழங்காலாழத்திற்கு ஒடியவண்ணமிருந்தது. இரண்டு வாரங்களாக சூரியனைக் கண்டவரேயில்லை. பகலிலும் இருள் கனத்துத் தேங்கிற்று. மழை விடாது பெய்து கொண்டிருந்தது. வீட்டிற்குள்

أنه بسس سه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/42&oldid=590700" இலிருந்து மீள்விக்கப்பட்டது