பக்கம்:பச்சைக்கனவு.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 C லா. ச. ராமாமிருதம்

ஆனந்தசிவத்துக்கு தொண்டையை என்னவோ பண்ணிற்று. விழிகளில் கண்ணிர் விளும்பு கட்டியது. தொண்டையைப் பலமாய்க் கனைத்துக்கொண்டு ஸ்னானத்திற்குச் சரேலென்று சென்றான்.

அம்முலு மன்னியைச் சேவித்துக்கொண்டாள். மதுரம் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, தீர்க்க சுமங்கலி பவா' என்று ஆசிர்வதித்தாள். ஆசி சாபம்போல் ஒலித்தது. பாஸ்கரனுக்கு, குளித்துவிட்டுப் படியேறுகையில் 'ஏண்டாப்பா இந்த வீட்டிற்கு வந்தோம்’ என்ற ஒரே எண்ணம், இசைத்தட்டில் கீறல் விழுந்தாற்போல், திரும்பத் திரும்ப அதே எண்ணம், இடம் தூக்கி எடுத்து விடுவார் இன்றி, நெஞ்சில் தவித்தது.

மாடியில் ஆனந்தசிவம், மதுரத்திற்குப் பட்டாசு சுடக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஐந்து பெற்றும் இன்னமும் ஆசை விடவில்லை. அவளுக்கும் பட்டாசுக்குப் பயப்பட ஆசை விடவில்லை.

பாஸ்கரன் பாலு அறைக்குச் சென்றான். பாலு ஒரு சோமாசியை அப்படியே முழுசாய் விழுங்க முயன்று கொண்டிருந்தான்.

'அம்முலுவின் கணவன் எங்கே?' என்று பாஸ்கரன் ஏதோ பேச்சுவாக்கில் கேட்பதுபோல் கேட்டான்.

'ஒ, அதுவா, அது ஒரு கதை. அவள் கணவன் எங்கே என்று ஒருத்தருக்கும் தெரியாது. அவன் ஒரு சங்கீத வித்வான். அப்படியென்றால் என்ன தெரியுமோல்வியோ? தேங்காமூடி வித்வான். இஸ்பேட் ராஜா. வாய் நிறைய அடைத்துக் கொண்டு, கன்னம் உப்பக் குதப்புகையில், பாலுவின் விழிகள் பயங்கரமாய்ப் பிதுங்கின.

'அக்காவுக்கும் அம்முலுவுக்கும் ஒரே பந்தலில்தான் கலியாணம் நடந்தது. பையன் கொஞ்சம் தறிதலை. படிப்பு வரவில்லை என்றுதான் பாட்டில் போட்டிருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/69&oldid=590727" இலிருந்து மீள்விக்கப்பட்டது