பக்கம்:பச்சைக்கனவு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்முலு C 61

தார்கள் என்று பந்தல் பேச்சு. ஏதோ பொறுப்பையும். தலையில் கட்டிப் போட்டால், பையன் உருப்பட்டு விடுவான் என்று பெற்றவர்கள் எண்ணம். அதனால் ஒரு கலியாணத்தையும் பண்ணி வைத்தார்கள்.'

'அவனுக்கும் அம்முலுவுக்கும் ஒரு வயது வித்தியாசம் தானிருக்கும் என்று நினைக்கிறேன். நான் ஒரு பத்து வருஷத்திற்கு முந்திய கதை சொல்கிறேன்.”

'தலை தீபாவளி வந்தது. அதுவும் ஒன்றாகத்தான் நடந்தது. மாப்பிள்ளைப் பையனை வழக்கம்போல் கூப்பிட்டிருந்தார்கள். மாப்பிள்ளை ஒரு கல்லிழைத்த மோதிரத்தை சண்டை போட்டு வாங்கினார். வித்வான் அட்சரம் எண்ணித் தாளம் போடுவது சபைக்கு எப்படித் தெரிகிறது?’’

"எல்லாம் குஷி'யாய்த்தானிருந்தது மாப்பிள்ளைப் பையன்கள் பட்டாசு சுட்டான்கள். பெண்டாட்டிகளுக்கு. சுடக் கற்றுக் கொடுத்தான்கள்- இல்லையா சேஷ்டை யெல்லாம்!'

பாலு தாத்தா மாதிரி பேசினான்.

பொல்லாத வேளை வந்தால் யார் என்ன பண்ண முடியும்? அம்முலு, பட்டாசு வெடித்து அப்பொழுதுதான் அணைந்து போன விளக்கை குனிந்து ஏற்றிக்கொண் டிருந்தாள். அம்முலு புதுப் புடவையும் புதுமணப்

பெண்ணுமாய் விளக்கை ஏற்றுகையில் எப்படி யிருந்திருப்பாள், அந்தக் காட்சியை எண்ணிப் பார்த்துக்கொள்.'

அவள் அகமுடையானுக்குத் திடீரென கும்மாளம் பிறந்து விட்டது. கல்யாணி ராகத்தின் உச்சஸ்தாயி ஸ்வரத்தை ஒரே மூச்சாய்ப் பிடித்துக்கொண்டு, இரண்டு கையிலும் இரண்டு ஒலைப் பட்டாசுகளை பக்கத்து விளக்கில் ஏற்றி அவள் முகத்துக்கெதிரே பிடித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/70&oldid=590728" இலிருந்து மீள்விக்கப்பட்டது