பக்கம்:பச்சைக்கனவு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 0 லா. ச. ராமாமிருதம்

“山ーLーfr一f一"

இரண்டு காதுகளையும் கெட்டியாப் பொத்திக் கொண்டு அம்முலு அப்படியே, குனிந்த தலை நிமிராது, குன்றி உட்கார்ந்து விட்டாள்.

பையனுக்குக் கிலி பிடித்துவிட்டது. ஏதோ செய்யத் தகாததைச் செய்துவிட்டோம் என்று தெரிந்து விட்டது. இடத்தை விட்டு ஒட்டம் பிடித்தான்.

'அம்முலு:- அம்முலு!”

'அன்றிலிருந்து அம்முலுக்குக் காதே கேட்கவில்லை. திருப்பித் திருப்பி என்ன கேட்டாலும், 'நீளமாய் ஒரே சத்தம்தான் எனக்குக் கேட்கிறது- யாரோ பாடறாளா?: என்பாள்.

"என்ன நடந்தது? எது நடந்தது? மாப்பிள்ளை பையன் எங்கே?'

'மாப்பிள்ளைப் பையனாவது மண்ணாங்கட்டி யாவது: எண்ணெய் ஸ்னானம் பண்ணி, புது வேஷ்டியுடன் ஒடினவன்தான். இன்னமும் அகப்படப் போகிறான். இங்கு வந்தவனுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பியவனு மில்லை. ஆச்சு, பத்து வருஷங்களும் போச்சு. அவனைத் தேடாத இடமில்லை. அம்முலுவுக்குப் பண்ணாத வைத்தியமில்லை. ஒன்றும் பயனில்லை. காதும் போக்க, கணவனும் போனான். வாழ்வும் போச்சு.”

அதே ஏக்கத்தில் அம்முலுவின் தாயார் இறந்து விட்டாள். ஒரே பெண். அப்புறம் அம்முலுவுக்கு கதி ஆனந்தசிவம்தான்.

அம்முலு மனம் என்ன பாடுபட்டிருக்குமோ, அதை ஆராய எனக்கு யோக்யதையுமில்லை, தைரியமுமில்லை. அவள் தன் வாழ்க்கையின் சூன்யத்தில் தான் ஐக்கியமாகி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/71&oldid=590729" இலிருந்து மீள்விக்கப்பட்டது