பக்கம்:பச்சைக்கனவு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6.8 C லா. ச. ராமாமிருதம்

பட்டுவா?’’ 'அதான், பத்மாதான். நான் அவளைப் பட்டு, பட்டம்மா என்று தோன்றினாற்போல் அழைப்பேன். எங்களிடையில் சண்டை வந்தால் பத்து மொத்து என்பேன். பத்து என்னவோ மொத்துதான். கதைப் புத்தகம் படிப்பதில்கூட அவளுக்கு ஆசை கிடையாது. அம்மா பத்மாளென்பாள். அப்பாதான் வாய் நிறையப் பத்மாவதி என்று கூப்பிடுவார்." - ஆஹா, உன் அப்பாவை எனக்குத் தெரியுமே, எவ்வளவு வாயும் மனசும் நிறைந்த மனுஷர் என்று'

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள். ஆனால் அப்பாவுக்கு என்னவோ என்மேல்தான் இஷ்டம்.”

"நீ தாrாயணி அல்லவா? தோற்ற சீட்டைத் துாக்கி எறிவதுபோல் பத்திரிகையை அலட்சியமாய் வீசினான். அது பறந்து சென்று ஜலத்தில் கிடந்த ஒரு பாறாங்கல் மேல் வீழ்ந்தது.

"ஏன் அதை எறிந்தீர்கள்?" மூண்டெழும் கோபத்தில் அவளுக்குக் கன்னங்கள் குறுகுறுத்தன.

'ஏன்? இதை வைத்துக்கொண்டு கலியாணத்திற்கு நாம் போகப் போகிறோமா?"

போகாவிட்டால் எறியனுமோ? கோபக்கண்ணிர் கண்களை உறுத்தியது. .

அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் முகம் சுண்டிப் போயிருந்தது. இருவரும் வெகுநேரம் வாளாயிருந்தனர்.

தாrாயணி!” - அவன் மெதுவாகக் கூப்பிட்டது அவளுக்குக் காது. கேட்கவில்லை. கிட்ட நெருங்கி முகத்தெதிரில் விரலைச் சுண்டினான்.

' -ம்ம்ம்?' திடுக்கென விழித்துக்கொண்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/77&oldid=590735" இலிருந்து மீள்விக்கப்பட்டது