பக்கம்:பச்சைக்கனவு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகூடிாயணி O 69

'என்ன தபஸில் இறங்கிவிட்டாய்?' 'நான் தாrாயணி அல்லவா? நீங்கள் பசுபதி.” அவள் அப்படிச் சொன்னதுமே அவன் முகத்தில் குபுக்கெனக் குங்குமம் குழம்பிற்று. உடல் கிடுகிடென ஆடிற்று. கீழே விழாதபடி அவள் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். அவள் அவனை அப்படியே அனைத்துக்கொண்டாள். அந்த வேகத்தில் பாலம் ஊஞ்சலாடிற்று. அவளுள் கிளர்ந்த தாய்மை தாங்க முடியாமல் வாய் குழறிற்று. புடவைத் தலைப்பால் நெற்றியை ஒற்றினாள். அப்பா! எவ்வளவு பலவீனமாய்ப் போய்விட்டார்: ஒன்றுமே தாங்க முடிவதில்லை. அவள் விழிகள் நிறைந்த கன்னத்தில் கண்ணிர் வழிந்தது.

'ஏன் அழுகிறாய்?" அவனைக் கட்டிக்கொண்டு தேம்பினாள். 'தாகrாயணி, ஏன் அழுகிறாய்?" 'ஒரு நாள் இது மாதிரி சமயத்தில் உங்களை நான் இழந்து விடுவேனோ?”

'நம் பையன் இருக்கிறான்-’’ 'இருந்தால் என்ன? உங்களுக்குப் பின்தான் அவன், எல்லாமுமே! நமக்குப் பின்தான் அவன் வந்தான். ஆமாம், எல்லாமே உங்களுக்கு அப்புறந்தான். இது விஷயத்தில் அன்று எப்படியோ அப்படித்தான் எனக்கு இன்றும். நான் இருக்கும்வரை அப்படித்தான்.'

அவள் ஆவேசத்தைக் கண்டு அதிசயித்து நின்றான். மாலை இரவுள் கடக்கும் நேரத்தில், கோயில் மணியோசை காற்றில் மிதந்து வந்து கலக்கையில் அவள் வெறி பிடித்தாற் போல் பேசுவதைக் காணச் சற்று அச்சமாய்க் கூட இருந்தது.

பழுக்கக் காய்ந்த வெல்லப்பாகை யாரோ வாயில் ஊற்றினாற்போல் கனவு கண்டு திடுக்கென விழித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/78&oldid=590736" இலிருந்து மீள்விக்கப்பட்டது