உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மக்கள் ஆட்சியில் பஞ்சாயத்து முறை மிகவும் முக்கிய மான அம்சமாகும். சீரிய பஞ்சாயத்து ஆட்சிதான் சக்தி வாய்ந்த மக்கள் சமுதாயத்தைச் சிருஷ்டிக்கும் மாபெரும் அமைப்பாகும். அந்த அமைப்பின் வெற்றி மக்களின் நல்வாழ்வின் அடிப்படையாகும். நல்வாழ்வை நோக்கி முன்னேறுவதற்கு சகல அமைப்புக்களின் தன்மையையும், தராதரத்தையும் ஒவ்வொருவரும் நன்கு அறிந்திருக்க வேண்டுவது அவசியமாகும். - பஞ்சாயத்து ஆட்சியின் சகல அம்சங்களும் இந்நூலில் மிக விளக்கமாகவும், தெளிவாகவும், மயக்கம், சிக்கல்கள் இன்றியும் எடுத்துரைக்கப்பெற்றுள்ளன. பஞ்சாயத்து உறுப் பினர்கள், அக்கரை கொண்டுள்ள பொதுமக்கள் யாவ ருக்கும் இது மிகவும் பயனுள்ள நூலாகும். பஞ்சாயத்து ஆட்சியில் பற்றுக்கொண்டுள்ள அனேவருக்கும் உறு துணையாக அமையும் என்ற நோக்கத்தோடு இப் பெரிய நூ8ல வெளியிடுகிருேம். பஞ்சாயத்துத் துறையில் பல நூல்கள் எழுதி அனுபவம் பெற்ற முல்லே பிஎல். முத்தையா அவைர்கள் இதனே எம் வெளியீடாக வெளியிட இசைந்தமைக்கு எங்கள் நன்றி உரித்தாகுக. த ங் க ள து பல அலுவல்களுக்கிடையே தங்கள் பொன்னை நேரத்தைச் செலவிட்டு இந் நூலேப்படித்து இதற்குக் கருத்துரை வழங்கிய உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி திரு. மா. அனந்தநாராயணன் அவர்கட்கும், முன் னுரை வழங்கிய உயர்நீதி மன்ற பப்ளிக் பிராசிக்யூட்டர் திரு. வி. பி. ராமன் அவர்கட்கும் எங்கள் நன்றி. இதனே மிகச் சிறந்தமுறையில் அச்சிட்டு உதவிய ஐடியல் அச்சகத்தாருக்கு எங்கள் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிருேம். கண, இராமநாதன்